காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2017
செப்டம்பர் 25-அக்டோபர் 22, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?
அன்று வாழ்ந்த யெகோவாவின் உண்மை ஊழியர்கள், எவ்வளவு காலத்துக்குச் சோதனைகளைச் சகித்திருக்க வேண்டுமென்று கேட்டார்கள். அப்படிக் கேட்டதற்காகக் கடவுள் அவர்களைத் திட்டவில்லை.
“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்”
நீங்கள் எதிர்பார்க்காத சோதனைகள் வரும்படி கடவுள் ஏன் விட்டுவிட்டார் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாமேல் முழு நம்பிக்கை வைத்து, அந்தச் சோதனைகளைச் சகிக்க எது உங்களுக்கு உதவும்?
வாழ்க்கை சரிதை
சோதனைகளைச் சகித்ததால் கிடைத்த ஆசீர்வாதங்கள்
சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு உண்மையில் செம்மறியாடுகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருக்கும்போது, அவர்கள் ஏன் மாடுகளைப் பற்றி விசாரித்தார்கள்? இதற்கான பதிலை, பேவல் மற்றும் மரியா சிவல்ஸ்க்கியின் வாழ்க்கை சரிதையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவது எப்படி?
பழைய சுபாவத்தைக் களைந்துபோடுவது மட்டும் போதாது, அது மறுபடியும் நம்மை அண்டாதபடி பார்த்துக்கொள்ளவும் வேண்டும். கெட்ட பழக்கங்களில் எவ்வளவுதான் ஊறிப்போயிருந்தாலும் நாம் எப்படி இந்த இரண்டையுமே செய்யலாம்?
புதிய சுபாவத்தை நிரந்தரமாக அணிந்துகொள்வது எப்படி?
யெகோவாவின் உதவியோடு, அவர் விரும்புகிற குணங்களை உங்களால் காட்ட முடியும். உதாரணத்துக்கு, கரிசனை, கருணை, மனத்தாழ்மை, சாந்தம் போன்ற குணங்களை என்ன நடைமுறையான வழிகளில் நீங்கள் காட்டலாம் என்பதைக் கவனியுங்கள்.
அன்பு—பொன்னான ஒரு குணம்
யெகோவாவுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணம்தான் அன்பு என்பதை வசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அன்பு என்றால் என்ன? நீங்கள் எப்படி அன்பை வளர்த்துக்கொள்ளலாம்? அதைத் தினமும் எப்படிக் காட்டலாம்?
நம் வரலாற்றுச் சுவடுகள்
“நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?”
1932-ல் மெக்சிகோ நகரத்தில் நடந்த சின்ன மாநாடு மிக முக்கியமானதாக ஆனதற்கு என்ன காரணம்?
வாசகர் கேட்கும் கேள்விகள்
இயேசுவின் ஆரம்பக் கால வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவும் லூக்காவின் பதிவும் ஏன் வித்தியாசப்படுகின்றன?