வாசகருக்குக் குறிப்பு
அன்பான வாசகரே,
காவற்கோபுரத்தின் இந்த இதழில், பின்வரும் கேள்விகளைப் பற்றி ஐந்து தொடர் கட்டுரைகளில் பார்ப்போம்:
முதலில், பூமியிலிருக்கும் தன்னுடைய பிள்ளைகள் பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்தார்?
இரண்டாவதாக, உண்மையான மனம் திருந்துதலைப் பற்றி அவர் என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார்? பாவம் செய்தவர்கள் மனம் திருந்த அவர் எப்படி உதவியிருக்கிறார்?
மூன்றாவதாக, வேண்டுமென்றே பாவம் செய்துவிட்டு மனம் திருந்தாமல் இருந்த ஒருவரை, எப்படிக் கையாள வேண்டும் என்று கொரிந்து சபைக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது?
நான்காவதாக, இன்று படுமோசமான பாவம் செய்கிறவர்களை மூப்பர்கள் எப்படிக் கையாள வேண்டும்?
ஐந்தாவதாக, மனம் திருந்தாத ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, சபையிலிருக்கிறவர்கள் அவரை எப்படித் தொடர்ந்து அன்போடும் இரக்கத்தோடும் நடத்தலாம்?