காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2018  

ஜூன் 4-ஜூலை 8, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

உண்மையான விடுதலை—அடைவது எப்படி?

அநீதி... தப்பெண்ணம்... ஏழ்மை... இவற்றிலிருந்து விடுதலை வேண்டுமென்று சிலர் ஆசைப்படுகிறார்கள். இன்னும் சிலர், மனதில் தோன்றுவதையெல்லாம் பேச வேண்டும்... நினைப்பதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால், உண்மையான சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

கடவுளுடைய சக்தி நம்மை எப்படி விடுதலை செய்திருக்கிறது? கடவுள் தருகிற சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

நியமிக்கப்பட்ட சகோதரர்களே, தீமோத்தேயுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது தீமோத்தேயுவுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தீமோத்தேயுவின் முன்மாதிரியிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

உற்சாகம் தருகிற கடவுளான யெகோவாவைப் பின்பற்றுங்கள்

யெகோவாவின் மக்களுக்கு எப்போதும் உற்சாகம் தேவைப்பட்டிருக்கிறது.

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது இப்போது ரொம்பவே முக்கியம்!

யெகோவாவுடைய நாள் ரொம்ப சீக்கிரத்தில் வரப்போவதால் நம்முடைய சகோதரர்கள்மேல் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குத் தேவையான சமயங்களில் நாம் அவர்களைப் பலப்படுத்த முடியும்.

இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?

ஏகப்பட்ட வாய்ப்புகள் தங்களுக்கு முன்னால் இருக்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது, என்ன தீர்மானம் எடுப்பது என்று தெரியாமல் இளைஞர்கள் திணறிப் போகலாம். அதனால், தங்களுடைய எதிர்காலம் சம்பந்தமான ஞானமான தீர்மானங்களை அவர்கள் எப்படி எடுக்கலாம்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைத் தனிப்பட்ட வெப்சைட்டிலோ சோஷியல் மீடியாவிலோ போடுவதற்கு ஏன் அனுமதி கிடையாது?

வாசகர் கேட்கும் கேள்விகள்

சங்கீதம் 144:​12-15 யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது?