Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்

ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்

பிள்ளைகளுக்குச் சொல்லித்தர...

யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. (எபே. 6:4) அதற்கு உதவி செய்வதற்காக யெகோவாவின் அமைப்பு நிறைய கட்டுரைகளையும் வீடியோக்களையும் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் எப்படி இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைக்குச் சொல்லித்தரலாம்?

  • என்னென்ன கருவிகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகளுக்காக நம் அமைப்பு வெளியிட்டிருக்கும் எல்லா வீடியோக்களும் பயிற்சிகளும் jw.org வெப்சைட்டில் இருக்கின்றன. a அதையெல்லாம் கண்டுபிடிக்க, “தேடவும்” பெட்டியில், “பிள்ளைகள்” அல்லது “டீனேஜர்கள்” என்று டைப் செய்து பாருங்கள்.

  • பொருத்தமானதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான வீடியோக்களை, பாடல்களை, அல்லது பயிற்சிகளை, “பிள்ளைகள்” என்ற தலைப்பின் கீழ் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். “குடும்ப வழிபாட்டுக்காக...” என்ற தலைப்பையும் நீங்கள் தேடிப் பார்க்கலாம்.

  • பிள்ளையோடு சேர்ந்து கலந்துபேசுங்கள். உங்கள் பிள்ளை உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அவனே தனியாக வீடியோக்களைப் பார்க்கவோ பயிற்சிகளைச் செய்யவோ விட்டுவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, அதைப் பற்றியெல்லாம் உங்கள் பிள்ளையோடு கலந்துபேசுங்கள். யெகோவாவின் நெருங்கிய நண்பனாக ஆவதற்கு உதவி செய்யுங்கள்.

a JW லைப்ரரியில் பிள்ளைகளுக்கான எல்லா வீடியோக்களும் இருக்கின்றன. ஆனால், ஒருசில பயிற்சிகள் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கின்றன.