காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜனவரி 2020  

மார்ச் 2-ஏப்ரல் 5, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’

சீஷராக்கும் வேலையை இன்னும் நன்றாகச் செய்ய 2020-க்கான வருடாந்தர வசனம் நமக்கு உதவியாக இருக்கும்.

மற்றவர்களுக்கு ‘மிகவும் ஆறுதலாக இருங்கள்’

மற்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பதற்கு உதவுகிற மூன்று குணங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது.

யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார்!

வியாதியாலோ பணக் கஷ்டத்தாலோ வயதாவதாலோ சோர்ந்துபோகும்போது ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நம் பரலோகத் தந்தை காட்டும் அன்பிலிருந்து எதுவுமே நம்மைப் பிரிக்க முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.

‘கடவுளுடைய சக்தி ஊர்ஜிதப்படுத்துகிறது’

கடவுளுடைய சக்தியால் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கிறிஸ்தவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவர் அப்படித் தேர்ந்தெடுக்கப்படும்போது என்ன நடக்கிறது?

நாங்களும் உங்களோடு வருகிறோம்

நினைவுநாள் சின்னங்களில் யாராவது பங்கெடுத்தால், அவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்? அவர்களுடைய எண்ணிக்கை வருஷா வருஷம் அதிகமாகிக்கொண்டே போவதை நினைத்து கவலைப்பட வேண்டுமா?