படிக்க டிப்ஸ்
தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் டிப்ஸ்
நிறைய பேரோடு சேர்ந்து, கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நாம் யெகோவாவை வணங்குகிறோம். ஆனால் அதுமட்டுமல்ல, தனிப்பட்ட விதத்திலும் குடும்பமாகவும் அவரை வணங்குகிறோம். தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் இதோ சில டிப்ஸ்:
-
கூட்டங்களுக்குத் தயாரியுங்கள். அதில் வரும் பாடல்களைப் பாடிப் பழகுங்கள். பதில் சொல்ல குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் தயாரியுங்கள்.
-
ஒரு பைபிள் பதிவை வாசியுங்கள். அந்தப் பதிவில் வரும் ஒரு சம்பவத்தை வரையுங்கள். அதில் கற்றுக்கொண்டதை எழுதி வையுங்கள்.
-
பைபிளில் இருக்கும் ஒரு ஜெபத்தைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். ஜெபத்தை இன்னும் நன்றாக செய்ய அது எப்படி உங்களுக்கு உதவும் என்று கலந்துபேசுங்கள்.
-
அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோவைப் பாருங்கள். அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள் அல்லது ஒரு பாராவை எழுதுங்கள்.
-
ஊழியத்துக்காகத் தயாரியுங்கள், நடித்துப் பாருங்கள்.
-
கடவுளுடைய படைப்புகளைக் கவனியுங்கள்; ஆழமாக யோசியுங்கள். யெகோவாவைப் பற்றி அவை என்ன சொல்கிறது என்று கலந்துபேசுங்கள். a
a மார்ச் 2023 காவற்கோபுரத்தில் வந்த “படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.