உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.
இன்னும் நன்றாகப் பாட எந்த நான்கு விஷயங்கள் நமக்கு உதவும்?
சரியான நிலையில் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ பாட்டுப் புத்தகத்தை உயர்த்திப் பிடியுங்கள். நன்றாக இழுத்து மூச்சுவிடுங்கள். வாயை அகலமாகத் திறங்கள். சத்தமாகப் பாடுங்கள்.—w17.11, பக்கம் 5.
அடைக்கல நகரங்கள் அமைந்திருந்த இடங்களும் அவற்றுக்குப் போகும் சாலைகளும் நமக்கு எதை உணர்த்துகின்றன?
இஸ்ரவேலில் ஆறு அடைக்கல நகரங்கள் இருந்தன. அவற்றுக்குப் போகும் சாலைகள் நன்றாகப் பராமரிக்கப்பட்டன. தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் சீக்கிரமாகவும் சுலபமாகவும் அந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போவதற்கு அவை வசதியாக இருந்தன.—w17.11, பக்கம் 14.
இதுவரை நமக்குக் கிடைத்த பரிசுகளிலேயே இயேசுவின் மீட்புவிலைதான் மிகச் சிறந்த பரிசு என்று ஏன் சொல்லலாம்?
என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஆசையை அது பூர்த்தி செய்கிறது. அதோடு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை ஆக வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆதாமின் சந்ததியாரான நம்மீது இருந்த அன்பால், நாம் பாவிகளாக இருந்தபோதே இயேசுவை கடவுள் நமக்காகக் கொடுத்தார்.—wp17.6, பக்கங்கள் 6-7.
இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி சங்கீதம் 118:22 குறிப்பிட்டதாக எப்படிச் சொல்லலாம்?
இயேசு, மேசியாவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவர் ஒதுக்கித்தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். “மூலைக்குத் தலைக்கல்லாக” ஆக வேண்டுமென்றால் அவர் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்.—w17.12, பக்கங்கள் 9-10.
மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்தமகன் உரிமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?
இயேசுவின் வம்சாவளி சிலசமயங்களில் மூத்தமகன்களின் வழியாக வந்திருக்கிறது; ஆனால் எல்லா சமயத்திலும் அப்படி அல்ல! தாவீது, ஈசாயின் மூத்தமகன் கிடையாது. இருந்தாலும் தாவீதின் வழியில்தான் மேசியாவின் வம்சாவளி வந்தது.—w17.12, பக்கங்கள் 14-15.
உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக பைபிளில் இருக்கும் சில ஆலோசனைகள் என்ன?
சில வகையான நோயாளிகளை மற்றவர்களிடமிருந்து பிரித்துவைக்க வேண்டும் என்று மோசேயின் திருச்சட்டம் குறிப்பிட்டது. பிணத்தைத் தொட்டவர்கள் கைகளைக் கழுவ வேண்டியிருந்தது. மனிதக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. குழந்தை பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியிருந்தது. ஏனென்றால், பிறந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் இரத்தத்துக்கு உறையும் தன்மை கிடைக்கிறது.—wp18.1, பக்கம் 7.
நம்மை நாமே ஓரளவு நேசிப்பது சரியானதுதான் என்று ஏன் சொல்லலாம்?
நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். (மாற். 12:31) கணவர்கள், “தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.” (எபே. 5:28) அதேசமயத்தில், நம்மீது நாம் வைத்திருக்கும் அன்பு சுயநலமாக மாறிவிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.—w18.01, பக்கம் 23.
ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு என்னென்ன படிகளை எடுக்கலாம்?
பைபிளை படிக்க வேண்டும், படித்ததைத் தியானிக்க வேண்டும். பிறகு, கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க வேண்டும். கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொண்டு, அதற்கு நன்றியோடு இருக்க வேண்டும்.—w18.02, பக்கம் 26.
ஜோதிடமும் குறிசொல்லுதலும் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கான வழிகள் அல்ல என்று ஏன் சொல்லலாம்?
நிறைய காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம், இந்த இரண்டு பழக்கங்களையும் பைபிள் கண்டனம் செய்வதுதான்.—wp18.2, பக்கங்கள் 4-5.
சாப்பாட்டுக்கு யாராவது நம்மை அழைக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒருவருடைய வீட்டுக்கு வருகிறோம் என்று சொல்லியிருந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். (சங். 15:4) முக்கியமான காரணம் இருந்தால் தவிர, போகாமல் இருக்கக் கூடாது. ஏனென்றால், நம்மை அழைத்தவர்கள் நமக்காகக் கஷ்டப்பட்டு உணவு தயாரித்திருப்பார்கள்.—w18.03, பக்கம் 18.
நியமிக்கப்பட்ட சகோதரர்கள் தீமோத்தேயுவிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
தீமோத்தேயு மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டினார்; ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்தார். பரிசுத்த வேலையை மும்முரமாகச் செய்தார்; கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடந்தார். தனக்குத்தானே பயிற்சி கொடுத்தார்; யெகோவாவின் சக்தியை நம்பியிருந்தார். மூப்பர்களும் மற்றவர்களும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்.—w18.04, பக்கங்கள் 13-14.