Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அனுபவம்

அனுபவம்

எல்லார்மேலும் கரிசனை

ஒரு நாள், நியூசிலாந்தில் இருக்கிற ஒரு சகோதரி jw.org-ல் ஒரு வீடியோவைப் பார்த்தார். யெகோவா கரிசனையை மனதளவில் மட்டுமல்ல, செயலிலும் காட்டுகிறார் என்று அதில் சொல்லியிருந்தது. (ஏசா. 63:7-9) மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்க முடிவு செய்தார். அன்றைக்கு கடைக்குப் போகும்போது, வீடில்லாத ஒரு பெண்ணைப் பார்த்தார். சாப்பிட ஏதாவது வாங்கித் தரட்டுமா என்று கேட்டார். அந்தப் பெண்ணும் ஒத்துக்கொண்டார். சாப்பாடு வாங்கிவரும்போது, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி அந்த பெண்ணிடம் சுருக்கமாக சாட்சிக் கொடுத்தார்.

அந்த பெண் பயங்கரமாக அழ ஆரம்பித்தார். தான் ஒரு சாட்சியாக வளர்க்கப்பட்டதாகவும் நிறைய வருஷங்களுக்கு முன்பு, சத்தியத்தை விட்டுப் போனதாகவும் சொன்னார். ஆனால், கொஞ்சம் நாளாகவே யெகோவாவிடம் திரும்பி வர உதவ சொல்லி ஜெபம் செய்திருக்கிறார். அந்த சகோதரி அவருக்கு ஒரு பைபிளைக் கொடுத்தார், பைபிள் படிப்புக்கும் ஏற்பாடு செய்தார். a

யெகோவாவை மாதிரியே நாம் மக்கள்மேலும் சொந்தக்காரர்கள்மேலும் சகோதர சகோதரிகள்மேலும் கரிசனை காட்டலாம். மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க வாய்ப்புகளைத் தேடுவதன் மூலமும் நாம் அதைக் காட்டலாம்.

a செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்ள, ஜூன் 2020 காவற்கோபுர இதழில் வெளிவந்த “என்னிடம் திரும்பி வாருங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.