Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இந்த வருஷத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளைப் படித்தீர்களா? கீழே இருக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?

பெண்களை நடத்தும் விதத்தில் யெகோவா என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்?

ஆண்களை மட்டும் விசேஷமாக நடத்த வேண்டும் என்று யெகோவா நினைப்பதில்லை. பெண்களை அவர் பாரபட்சம் இல்லாமல் நடத்துகிறார். அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார்; அவர்களுடைய உணர்வுகளை மதிக்கிறார், அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார், அவர்களை நம்புகிறார். தன் வேலையைச் செய்ய அவர்களைப் பயன்படுத்துகிறார்.—w24.01, பக். 15-16.

“அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள்” என்று எபேசியர் 5:7-ல் இருக்கும் ஆலோசனையை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய தூண்டுகிறவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைக்கக் கூடாது என்று பவுல் எச்சரிக்கிறார். இதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நேரில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் நம்மால் மக்களோடு பழக முடிகிறது.—w24.03, பக். 22-23.

எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை நம்பி ஏமாந்துவிடக் கூடாது?

உண்மையா என்று தெரியாமலேயே சகோதரர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லலாம் அல்லது அனுப்பலாம். கட்டுக்கதைகள் இருக்கிற ஈ-மெயில்களை முன்பின் தெரியாதவர்கள் நமக்கு அனுப்பலாம். சத்தியத்தில் ஆர்வம் இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் விசுவாசதுரோகிகள்கூட அதை அனுப்பலாம்.—w24.04, பக். 12.

சாலொமோன் ராஜாவையும், சோதோம் கொமோரா மற்றும் பெருவெள்ளத்தில் இறந்தவர்களையும் யெகோவா எப்படி நியாயந்தீர்ப்பார் என்பதைப் பற்றி நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது?

இவர்களை யெகோவா நிரந்தர அழிவுக்கு விட்டுவிட்டாரா என்பது தெரியாது. யெகோவாவுக்குத்தான் அவர்களைப் பற்றி எல்லாமே தெரியும் என்றும், அவர் இரக்கமுள்ளவர் என்றும் தெரியும்.—w24.05, பக். 3-4.

யெகோவா நம்முடைய ‘கற்பாறையாக’ இருப்பதால் எதில் நாம் உறுதியாக இருக்கலாம்? (உபா. 32:4)

யெகோவா நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். அவர் நம்பகமானவர், வாக்குறுதிகளைக் காப்பாற்றுபவர். நிலையாகவும் உறுதியாகவும் இருப்பவர். அவருடைய சுபாவமும் அவருடைய நோக்கமும் என்றுமே மாறாது.—w24.06, பக். 26-28.

வேறு சபைக்கு மாறிப் போகும்போது, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள எது உதவும்?

யெகோவாவையே நம்பியிருங்கள், தன் ஊழியர்களுக்கு உதவியது போலவே உங்களுக்கும் உதவுவார். பழைய சபையோடு ஒப்பிடாதீர்கள். புதிய சபையில் சுறுசுறுப்பாகச் சேவை செய்யுங்கள், புது நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்.—w24.07, பக். 26-28.

மத்தேயு 25-ல் இருக்கும் மூன்று உவமைகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடிகிறது?

உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை செம்மறியாடுகள், வெள்ளாடுகள் உவமையிலிருந்து கற்றுக்கொண்டோம். தயாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை கன்னிப்பெண்கள் உவமையிலிருந்து கற்றுக்கொண்டோம். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்... கடினமாக உழைக்க வேண்டும்... என்பதை தாலந்து பற்றிய உவமையிலிருந்து கற்றுக்கொண்டோம்.—w24.09, பக். 20-24.

சாலொமோனின் ஆலயத்தின் நுழைவு மண்டபம் எவ்வளவு உயரமாக இருந்தது?

சில பூர்வகால கையெழுத்துப் பிரதிகளில், 2 நாளாகமம் 3:4-ல் நுழைவு மண்டபத்தின் உயரம் “120 முழம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது 53 மீட்டர் (175 அடி). ஆனால், மற்ற நம்பகமான பதிவுகளில் அதன் உயரம் “20 முழம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது கிட்டத்தட்ட 9 மீட்டர் (30 அடி). ஆலயத்தின் நுழைவு பகுதியில் இருக்கும் சுவரின் தடிமனை வைத்துப் பார்க்கும்போது, 20 முழம் உயரம்தான் சரியென தோன்றுகிறது.—w24.10, பக். 31.

உதவி ஊழியர் ‘ஒரே மனைவியை உடைய கணவராக’ இருக்க வேண்டும் என்றால் என்ன? (1 தீ. 3:12)

ஒரே ஒரு பெண்ணை மட்டுமே கல்யாணம் செய்திருக்க வேண்டும், பாலியல் முறைகேட்டில் ஈடுபடக் கூடாது. மற்ற பெண்கள்மேல் கண்வைக்கக் கூடாது; தவறான எண்ணத்தோடு பழகக் கூடாது.—w24.11, பக். 19.

எஜமானின் இரவு விருந்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை யோவான் 6:53-ல் இயேசு சொல்லவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

தன் சதையைச் சாப்பிட்டு, இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று யோவான் 6:53-ல் இயேசு சொன்னார். இதை கி.பி. 32-ல், கலிலேயாவில் யூதர்களிடம் சொன்னார். அவர்கள் இன்னமும் இயேசுமேல் விசுவாசம் வைக்க வேண்டியிருந்தது. ஆனால், எஜமானின் இரவு விருந்து கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு, எருசலேமில் நடந்தது. பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிறவர்களிடம் இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தார்.—w24.12, பக். 10-11.