Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு ப்ராஜெக்ட்

நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய உண்மையுள்ள மக்கள்

நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய உண்மையுள்ள மக்கள்

நியாயாதிபதிகள் 11:30-40-ஐ வாசியுங்கள். யெப்தாவும் அவருடைய மகளும் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய பதிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

வசனத்தின் பின்னணியை ஆராய்ச்சி செய்யுங்கள். யெகோவாவிடம் நேர்ந்துகொள்வதைப் பற்றி உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் என்ன நினைத்தார்கள்? (எண். 30:2) யெப்தாவும் அவருடைய மகளும் யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருந்ததை எப்படிக் காட்டினார்கள்?—நியா. 11:9-11, 19-24, 36.

ஆழமாக தோண்டிப் பாருங்கள். நேர்ந்துகொண்டபோது யெப்தா எதை மனதில் வைத்திருந்திருப்பார்? (w16.04 பக். 7 பாரா 12) நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற யெப்தாவும் அவருடைய மகளும் என்ன தியாகங்களைச் செய்தார்கள்? (w16.04 7-8 ¶14-16) இன்று கிறிஸ்தவர்கள் என்னென்ன விஷயங்களுக்கெல்லாம் நேர்ந்துகொள்கிறார்கள்?—w17.04 பக். 5-8 பாரா. 10-19.

பாடங்களைக் கண்டுபிடியுங்கள். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • ‘அர்ப்பணம் செய்தபோது கொடுத்த வாக்கை நிறைவேற்ற எது எனக்கு உதவும்?’ (w20.03 பக். 13 பாரா 20)

  • ‘யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய நான் என்ன தியாகங்கள் செய்யலாம்?’

  • ‘திருமண வாக்குறுதிக்கு உண்மையாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ (மத். 19:5, 6; எபே. 5:28-33)