மிகப் பிரமாண்டமான வேலை!
எருசலேமில் நடக்கப்போகும் மிக முக்கியமான கூட்டத்துக்கான நேரம் அது. தன்னுடைய தலைவர்களையும், அரண்மனை அதிகாரிகளையும், பலசாலிகளையும் தாவீது ராஜா அழைத்திருக்கிறார். ஒரு விசேஷ அறிவிப்பைக் கேட்பதில் அவர்கள் எல்லாருக்கும் பயங்கர சந்தோஷம்! உண்மைக் கடவுளை வணங்குவதற்காக ஒரு பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டும்படி தாவீதின் மகனான சாலொமோனை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த வயதான இஸ்ரவேல் ராஜாவுக்குக் கடவுளுடைய சக்தியால் ஆலயத்தின் வரைபடம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது; அவர் அதைச் சாலொமோனுக்குக் கொடுத்திருக்கிறார். “செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை” என்று தாவீது சொல்கிறார்.—1 நா. 28:1, 2, 6, 11, 12; 29:1.
அடுத்ததாக, தாவீது இந்தக் கேள்வியைக் கேட்கிறார்: “இப்போதும் உங்களில் இன்றைய தினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார்?” (1 நா. 29:5) நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? அந்தப் பிரமாண்டமான வேலையை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்களா? இஸ்ரவேலர்கள் உடனடியாகச் செயல்பட்டார்கள். “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்.”—1 நா. 29:9.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆலயத்தைவிட மிகப் பிரமாண்டமான ஒன்றை யெகோவா ஏற்படுத்தினார். இயேசுவுடைய பலியின் அடிப்படையில் மக்கள் தன்னை வணங்குவதற்காக, ஓர் ஆன்மீக ஆலயத்தை அவர் ஏற்படுத்தினார். (எபி. 9:11, 12) மக்கள் தன்னோடு சமரசமாவதற்கு யெகோவா எப்படி உதவுகிறார்? சீடராக்கும் வேலையின் மூலம் இதைச் செய்கிறார். (மத். 28:19, 20) இதனால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான சீடர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். நூற்றுக்கணக்கான புதிய சபைகள் உருவாகின்றன.
இந்த அமோக வளர்ச்சியின் காரணமாக, நிறைய பைபிள் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட வேண்டியிருக்கிறது. நிறைய ராஜ்ய மன்றங்களைக் கட்டவும் அதைப் பராமரிக்கவும் வேண்டியிருக்கிறது. அதோடு, மாநாட்டு மன்றங்களைக் கட்டுவதற்கான இடங்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் நம் வேலை பிரமாண்டமாக நடந்து வருகிறது என்பதையும், அந்த வேலை அமோக பலன்களைத் தருகிறது என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா?—மத். 24:14.
கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இருக்கிற அன்பும், பிரசங்க வேலையின் அவசரத்தன்மையும், ‘கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளை மனப்பூர்வமாகச் செலுத்த’ கடவுளுடைய மக்களைத் தூண்டுகிறது. ‘[நம்முடைய] பொருளால் கர்த்தரைக் கனம்பண்ணுவது’ நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! இந்த வளங்களை உண்மையாகவும் ஞானமாகவும் பயன்படுத்தி, மனித சரித்திரத்திலேயே மிகப் பிரமாண்டமான விதத்தில் இந்த வேலை செய்யப்பட்டு வருகிறது. இதைப் பார்ப்பது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—நீதி. 3:9.
^ பாரா. 9 இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்.
^ பாரா. 11 இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட் வைத்திருக்கிறவர்கள், www.jwindiagift.org வெப்சைட்டைப் பயன்படுத்தி நன்கொடை கொடுக்கலாம்.
^ பாரா. 13 முடிவான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
^ பாரா. 20 ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.