காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2017  

ஏப்ரல் 3 முதல் 30, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்!

மனிதர்கள் மற்றும் பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன? என்ன தவறு நடந்துவிட்டது? கடவுளுடைய நோக்கம் நிறைவேற இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலி எப்படி வழி திறந்திருக்கிறது என்று ஏன் சொல்கிறோம்?

மீட்புவிலை—தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு”

இந்தத் தெய்வீக ஏற்பாடு, அருமையான ஆசீர்வாதங்களுக்கு வழி திறந்து வைப்பதோடு மட்டுமல்லாமல், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாருக்கும் மிக முக்கியமாக இருக்கிற விஷயங்களோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

வாழ்க்கை சரிதை

கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறோம்!

கனடாவில் பயனியர்களாகவும், பிரேசில் மற்றும் போர்ச்சுகலில் மிஷனரிகளாகவும், டக்லஸ் மற்றும் மேரி கெஸ்ட் கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறார்கள்.

யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார்

அன்று, தன்னுடைய மக்களை வழிநடத்த, யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தினார். கடவுள்தான் அவர்களுக்கு உதவி செய்தார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

இன்று கடவுளுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்துவது யார்?

தன்னைப் பின்பற்றுகிறவர்களோடு இந்தச் சகாப்தத்தின் கடைசிக்கட்டம்வரை இருப்பதாக இயேசு அவர்களிடம் வாக்குக் கொடுத்தார். இன்று பூமியில் இருக்கும் கடவுளுடைய மக்களை அவர் எப்படி வழிநடத்துகிறார்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

‘உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் கடவுள் அனுமதிக்க மாட்டார்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அப்படியென்றால், நம்மால் எதைச் சகித்துக்கொள்ள முடியுமென்று கடவுள் முன்கூட்டியே தீர்மானிக்கிறார் என்றும், அதை வைத்து, நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டுமென்று அவர் முடிவு செய்கிறார் என்றும் அர்த்தமா?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!”

1920-களின் முடிவிலும் 1930-களின் ஆரம்பத்திலும் இருந்த வைராக்கியமுள்ள பயனியர்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான இடங்களில் பிரசங்கிப்பதற்குத் தீர்மானமாக இருந்தார்கள்.