காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2018  

ஏப்ரல் 2-29, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

நோவா, தானியேல், யோபு​—⁠இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள்

இன்று நமக்கு இருக்கிற அதே போன்ற பிரச்சினைகள் விசுவாசமுள்ள இந்த மூன்று நபர்களுக்கும் இருந்தன. கடவுளுக்கு உத்தமமாக இருக்க எது அவர்களுக்கு உதவியது?

நோவா, தானியேல், யோபு​—⁠இவர்களைப் போல் யெகோவாவை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

இவர்கள் எப்படி சர்வ வல்லமையுள்ள கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள்? அப்படித் தெரிந்துகொண்டது அவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது? அவர்கள் காட்டிய விசுவாசத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

வாழ்க்கை சரிதை

யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்!

பஸ்ஸில் பயணம் செய்தபோது காதில் விழுந்த சில வார்த்தைகள் ஒரு தம்பதியின் வாழ்க்கையையே மாற்றியது.

ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?

‘ஆன்மீகச் சிந்தையுள்ள’ ஒரு நபர் எப்படி இருப்பார் என்று பைபிள் விளக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு நபர், ‘உலகச் சிந்தையுள்ள’ ஒரு நபரிலிருந்து எப்படி வித்தியாசப்பட்டிருப்பார் என்றும் காட்டுகிறது.

ஆன்மீக நபராக தொடர்ந்து முன்னேறுங்கள்!

பைபிள் அறிவு மட்டுமே ஒருவரை ஆன்மீகச் சிந்தையுள்ள நபராக ஆக்கிவிடாது. வேறு எதுவும் தேவை?

சந்தோஷம்—கடவுள் தரும் ஒரு குணம்

அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எதிர்ப்படும் சோதனைகள் உங்கள் சந்தோஷத்தைப் பறித்துவிடுகிறதா? அப்படியென்றால், இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற நீங்கள் என்ன செய்யலாம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

பொதுப் பேச்சுகள் அயர்லாந்தில் நல்ல செய்தியைப் பரப்பின

வயல் “அறுவடைக்குத் தயாராக இருப்பதை” சி. டி. ரஸல் ஏன் உறுதியாக நம்பினார்?