Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

காட்டுப் புறாக்களையும், புறாக்களையும் பலியாகக் கொடுக்கலாம் என்று யெகோவா சொன்னது இஸ்ரவேலர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?

இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த சட்டத்தில் காட்டுப் புறாக்களையும், புறாக்களையும் பலியாகக் கொடுக்கலாம் என்று யெகோவா சொன்னார். திருச்சட்டத்தில் இந்த இரண்டு பறவைகளும் எப்போதும் சேர்ந்தேதான் சொல்லப்பட்டிருந்தன. ஒன்று கிடைக்காவிட்டால் இன்னொன்றைக் கொடுக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. (லேவி. 1:14; 12:8; 14:30) ஏன் அப்படிச் சொல்லப்பட்டிருந்தது? ஏனென்றால், காட்டு புறாக்கள் எல்லா சமயத்திலும் கிடைக்காது. ஏன் கிடைக்காது?

காட்டுப் புறா

காட்டுப் புறாக்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்காது. வெவ்வேறு இடத்துக்குப் போய்க்கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் இஸ்ரவேல் தேசம் முழுக்க இருக்கும். அக்டோபர் மாதம் வந்துவிட்டால் வெயில் இருக்கிற தெற்குப் பக்க நாடுகளுக்குப் போய்விடும். பின்பு, மறுபடியும் வசந்த காலத்தில் இஸ்ரவேலுக்குத் திரும்பி வரும். (உன். 2:11, 12; எரே. 8:7) அதனால், பூர்வ இஸ்ரவேலில் குளிர்காலம் வந்துவிட்டால் பலி கொடுப்பதற்காக காட்டுப் புறாக்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.

மாடப் புறா

ஆனால், புறாக்கள் அப்படியல்ல. பெரும்பாலும் அவை ஒரே இடத்தில்தான் இருக்கும். அதனால், இஸ்ரவேல் தேசத்தில் அவை வருஷம் முழுக்க கிடைக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், வீடுகளிலும் புறாக்கள் வளர்க்கப்பட்டன. (யோவான் 2:14, 16-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) பைபிள் செடிகளும் மிருகங்களும் என்ற ஆங்கிலப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “பாலஸ்தீனாவில் இருக்கிற எல்லா கிராமங்களிலும் நகரங்களிலும் புறாக்கள் வளர்க்கப்பட்டன. எல்லாருடைய வீட்டிலும் புறாக்கள் வந்து தங்குவதற்காக புறா மாடங்கள் இருந்தன. இல்லையென்றால் சுவற்றில் ஒரு ஓட்டையாவது இருந்தது.”—ஏசாயா 60:8-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

மாடத்தில் இருக்கும் புறா

இஸ்ரவேலர்களுக்கு எந்தப் பறவை கிடைத்ததோ அதை பலியாகக் கொடுத்தபோது யெகோவா ஏற்றுக்கொண்டார். இதிலிருந்து அவர் எவ்வளவு அன்பானவர், நியாயமானவர் என்பது தெரிகிறது.