Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறைவனின் ஆசியை நீங்கள் என்றென்றும் சுவைக்கலாம்

இறைவனின் ஆசியை நீங்கள் என்றென்றும் சுவைக்கலாம்
  • போர், சண்டைச் சச்சரவு இல்லாத உலகத்துக்காக ஏங்குகிறீர்களா?

  • நோய், கஷ்டம், மரணம் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

  • கண்ணீரும் கவலையும் இல்லாமல் வாழ விரும்புகிறீர்களா?

  • இயற்கைப் பேரழிவுகளே ஏற்படாத ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்ற தவிப்பு உங்களுக்கு இருக்கிறதா?

இந்த அழகான பூமியைப் படைத்த நம்முடைய அன்பான இறைவன், நம்மை என்றென்றும் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ வைக்கப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இது வெறும் ஒரு கனவு அல்ல.

இந்தக் கட்டுரையில் நாம் இதைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம்:

  • நம்மைப் படைத்தவருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?

  • சீக்கிரத்தில் இறைவன் செய்யப்போகிற நல்ல விஷயங்களைப் பற்றி நபிமார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

  • வேதத்தில் இறைவன் நமக்கு என்ன சொல்லியிருக்கிறார்?

  • இப்போதே சந்தோஷமாக இருக்கவும் எதிர்காலத்தில் இறைவன் தரும் ஆசியைப் பெறவும் நாம் என்ன செய்யலாம்?

முதலில், நம்மைப் படைத்த இறைவன் நம்மேல் எந்தளவுக்கு அக்கறையும் பாசமும் வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம்.