நீங்கள் எதிர்பார்க்கிற காரியங்கள்மீது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
“விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்.”—எபி. 11:1.
பாடல்கள்: 81, 134
1, 2. (அ) மற்றவர்களுடைய எதிர்பார்ப்புக்கும் நம்முடைய எதிர்பார்ப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? (ஆ) என்ன முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?
உண்மை கிறிஸ்தவர்களான நமக்கு அருமையான எதிர்பார்ப்பு காத்திருக்கிறது! தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தப் போவதாகவும் தன்னுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவது போல பூமியிலும் நிறைவேறப் போவதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 6:9, 10) இந்த முக்கியமான விஷயங்களைத்தான் நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்! பரலோகத்திலோ பூமியிலோ நமக்கு முடிவில்லாத வாழ்க்கையைத் தரப்போவதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்; அந்த வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கும்! (யோவா. 10:16; 2 பே. 3:13) அதோடு, இந்தக் கடைசி நாட்களில் யெகோவா தன்னுடைய மக்களை எப்படித் தொடர்ந்து வழிநடத்துவார், பாதுகாப்பார் என்று பார்ப்பதற்கும் நாம் ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.
2 இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேருக்கு ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, லாட்டரியில் பரிசு கிடைக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால், அவர் எதிர்பார்ப்பது நிச்சயம் கிடைக்கும் என்று அவரால் சொல்ல முடியாது. ஆனால், கிறிஸ்தவர்களுடைய எதிர்பார்ப்பு வித்தியாசமானது. ‘எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதுதான்’ விசுவாசம் என்று பைபிள் சொல்கிறது. அதாவது, யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற விஷயங்கள் கண்டிப்பாக எபி. 11:1) கடவுளுடைய வாக்குறுதிகள்மீது நமக்கு இருக்கிற விசுவாசத்தைப் பலப்படுத்த நாம் என்ன செய்யலாம் என்றும் பலமான விசுவாசம் நமக்கு எப்படி உதவும் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
நடக்கும் என்று விசுவாசம் இருக்கிறவர்கள் நம்புவார்கள். (3. கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் ஏன் நம்புகிறோம்?
3 நாம் யாருமே விசுவாசத்தோடு பிறப்பதில்லை. நமக்கு விசுவாசம் இருக்க வேண்டுமென்றால், கடவுளுடைய சக்தி நம் இதயத்தை வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும். (கலா. 5:22) யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவும். அவர் சர்வ வல்லமையுள்ளவர், ஞானமுள்ளவர் என்பதை நாம் புரிந்துகொண்டால், அவருடைய வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புவோம். தன்னுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்று யெகோவா நிச்சயமாக இருக்கிறார்; அவையெல்லாம் ஏற்கெனவே நிறைவேறிவிட்டது போல் அவருக்கு இருக்கிறது. அதனால்தான், “இவை நிறைவேறிவிட்டன!” என்று அவரே சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 21:3-6-ஐ வாசியுங்கள்.) யெகோவா “உண்மையுள்ள தேவன்.” அவருடைய வாக்குறுதிகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நமக்குத் தெரியும். அதனால்தான், எதிர்காலத்தைப் பற்றி அவர் சொல்லும் விஷயங்களை நாம் நம்புகிறோம்.—உபா. 7:9.
பலமான விசுவாசத்தோடு இருந்த அன்றைய ஊழியர்கள்
4. அன்று வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களுக்கு எதன்மீது விசுவாசம் இருந்தது?
4 கடவுளுடைய வாக்குறுதிகளில் அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்த 16 ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி எபிரெயர் 11-வது அதிகாரம் சொல்கிறது. அவர்களும் இன்னும் சிலரும் “தங்களுடைய விசுவாசத்தினால்” கடவுளைப் பிரியப்படுத்தினார்கள் என்றும் அந்த அதிகாரம் சொல்கிறது. (எபி. 11:39) கடவுள் வாக்குக் கொடுத்திருந்த ‘வித்துவுக்காக’ அவர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள். இந்த “வித்து” கடவுளுடைய எதிரிகள் எல்லாரையும் அழித்துவிட்டு, இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (ஆதி. 3:15) யெகோவா தங்களை உயிர்த்தெழுப்புவார் என்றும் அந்த உண்மை ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், தங்களைப் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்புவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இயேசு அந்தச் சமயத்தில் அதற்கான வழியைத் திறக்கவில்லை. (கலா. 3:16) இதே பூமியில், அழகான பூஞ்சோலையில் வாழவே அவர்கள் காத்திருந்தார்கள்.—சங். 37:11; ஏசா. 26:19; ஓசி. 13:14.
5, 6. ஆபிரகாமும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் எதற்காகக் காத்திருந்தார்கள்? தங்களுடைய விசுவாசத்தை அவர்கள் எப்படிப் பலப்படுத்தினார்கள்? (ஆரம்பப் படம்)
5 “மேற்சொல்லப்பட்ட எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள்; வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் பார்க்கவில்லை என்றாலும், தொலைவிலிருந்து அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்” என்று விசுவாசமுள்ள அந்த ஊழியர்களைப் பற்றி எபிரெயர் 11:13 சொல்கிறது. அவர்கள் எல்லாரும் புதிய உலகத்துக்காகக் காத்திருந்தார்கள், அங்கே வாழ்வது போல் கற்பனை செய்தார்கள். அப்படிக் கற்பனை செய்தவர்களில் ஒருவர்தான் ஆபிரகாம். அப்படிப்பட்ட காலத்தை “பார்க்கப்போகிற எதிர்பார்ப்பில் [ஆபிரகாம்] மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார்” என்று இயேசு சொன்னார். (யோவா. 8:56) “கடவுளே கட்டியமைத்த” அந்த அரசாங்கம் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யப் போகிற காலத்துக்காக சாராள், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் நிறைய பேர் காத்திருந்தார்கள்.—எபி. 11:8-11.
6 ஆபிரகாமும் அவருடைய குடும்பத்தில் இருந்தவர்களும் தங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தினார்கள்? அவர்கள் யெகோவாவைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தார்கள். சில சமயங்களில், தேவதூதர்கள் மூலமாகவோ, தரிசனங்கள் மூலமாகவோ, கனவுகள் மூலமாகவோ கடவுள் அவர்களிடம் பேசினார். நம்பகமான பழங்கால ஆவணங்களிலிருந்தும், விசுவாசமாக இருந்த வயதானவர்களிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம். ஆபிரகாமும் அவருடைய குடும்பமும் கடவுளுடைய வாக்குறுதிகளை மறக்கவே இல்லை, அவற்றைப் பற்றி எப்போதும் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள். அதனால்தான், கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. கஷ்டமான சூழ்நிலைகள் வந்தபோது அல்லது கொடுமைகளை அனுபவித்தபோதும்கூட அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்.
7. நம் விசுவாசத்தைப் பலப்படுத்த யெகோவா நமக்கு என்ன கொடுத்திருக்கிறார், நாம் என்ன செய்ய வேண்டும்?
7 நம்முடைய விசுவாசம் பலமாக இருப்பதற்கு எது உதவும்? எதிர்காலத்தில் நிறைவேறப் போகும் வாக்குறுதிகளைப் பற்றி நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, யெகோவா பைபிளைக் கொடுத்திருக்கிறார். சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய சங். 1:1-3; அப்போஸ்தலர் 17:11-ஐ வாசியுங்கள்.) அதோடு, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாக யெகோவா நமக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிக்கிறார்.’ (மத். 24:45) அன்று வாழ்ந்த கடவுளுடைய மக்களைப் போல, நாமும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி தவறாமல் படிக்க வேண்டும், அவற்றைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, நம்மால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும். அதோடு, அவருடைய அரசாங்கம் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யப்போகும் காலத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கவும் முடியும்.
வேண்டும் என்பதைப் பற்றி அதில் சொல்லியிருக்கிறார். அதனால், பைபிளைத் தினமும் வாசித்து, அதன்படி நடந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். (8. ஜெபம் எப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்?
8 தங்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள அன்று வாழ்ந்த யொகோவாவின் மக்களுக்கு வேறு எதுவும் உதவியாக இருந்தது? உதவிக்காக அவர்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்ததும், அவர்களுடைய ஜெபத்திற்கு யெகோவா பதில் கொடுத்ததைப் பார்த்ததும்தான் அவர்களுடைய விசுவாசம் பலப்பட உதவியாக இருந்தது. (நெ. 1:4, 11; சங். 34:4, 15, 17; தானி. 9:19-21) அதே போல, நம்முடைய ஜெபங்களை யெகோவா கேட்கும்போதும், நமக்குத் தேவையானதைச் சரியான நேரத்தில் தரும்போதும், நம்முடைய விசுவாசம் பலப்படுகிறது. (1 யோவான் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) நம்முடைய விசுவாசம் இன்னும் பலமாவதற்குக் கடவுளுடைய சக்திக்காக நாம் “கேட்டுக்கொண்டே” இருக்க வேண்டும்.—லூக். 11:9, 13.
9. வேறு என்னென்ன விஷயங்களுக்காகவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும்?
9 நாம் ஜெபம் செய்யும்போது, நமக்குத் தேவையானதைக் கேட்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு ஜெபத்தில் நன்றி சொல்ல வேண்டும், அவரைப் புகழ வேண்டும். ஏனென்றால், அருமையான விஷயங்கள் ஏராளமானவற்றை அவர் நமக்குச் செய்திருக்கிறார்! (சங். 40:5) உலகம் முழுவதும் இருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்காக யெகோவாவின் மக்கள் ஜெபம் செய்கிறார்கள். உதாரணத்துக்கு, ‘விலங்கிடப்பட்டவர்களை’ அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். தங்களை ‘தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்காகவும்’ ஜெபம் செய்கிறார்கள். நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா பதில் தருவதைப் பார்க்கும்போது, அவர்மீது நமக்கு இருக்கும் விசுவாசம் இன்னும் பலப்படுகிறது, அவரோடு இன்னும் நெருங்கிப் போக முடிகிறது.—எபி. 13:3, 7.
அவர்கள் உண்மையாக இருந்தார்கள்
10. தைரியமாக இருக்கவும் கடவுளுக்கு உண்மையாக இருக்கவும் நிறைய பேருக்கு எது உதவியது?
10 எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலர் பவுல் இப்படிச் சொன்னார்: “பெண்கள், இறந்துபோன தங்களுடைய அன்பானவர்களை உயிர்த்தெழுதலில் பெற்றுக்கொண்டார்கள்; வேறு சிலர், அதைவிட மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்காக, விடுதலை பெறச் சம்மதிக்காமல் சித்திரவதையைச் சகித்தார்கள்.” (எபி. 11:35) உயிர்த்தெழுதலைப் பற்றி கடவுள் கொடுத்த வாக்குறுதிமீது பலமான விசுவாசம் இருந்ததால் அன்று வாழ்ந்த நிறைய பேர் சோதனைகளைச் சகித்தார்கள், கடவுளுக்கு உண்மையாக இருந்தார்கள். எதிர்காலத்தில் கடவுள் அவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்புவார் என்றும், அவர்கள் பூமியில் முடிவில்லாமல் வாழ்வார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். நாபோத்தையும் சகரியாவையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். (1 இரா. 21:3, 15; 2 நா. 24:20, 21) தானியேல், சிங்கக் குகையில் தூக்கி எறியப்பட்டார். அவருடைய நண்பர்கள், கொழுந்து விட்டு எரியும் தீயில் எறியப்பட்டார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போவதற்குப் பதிலாக அவர்கள் சாவதற்கே தயாராக இருந்தார்கள். யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுப்பார், கஷ்டங்களைச் சகிப்பதற்கு உதவுவார் என்ற பலமான விசுவாசம் அவர்களுக்கு இருந்தது.—தானி. 3:16-18, 20, 28; 6:13, 16, 21-23; எபி. 11:33, 34.
11. விசுவாசமாக இருந்ததால் சில தீர்க்கதரிசிகள் என்னென்ன சோதனைகளைச் சகித்தார்கள்?
11 மிகாயா, எரேமியா போன்ற நிறைய தீர்க்கதரிசிகள் கேலி செய்யப்பட்டார்கள் அல்லது சிறையில் போடப்பட்டார்கள். எலியாவைப் போல மற்ற தீர்க்கதரிசிகள், “பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து, குகைகளிலும் குழிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள்.” ‘எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்பியதால்,’ அவர்கள் எல்லாரும் சகிப்புத்தன்மையோடும் உண்மையோடும் இருந்தார்கள்.—எபி. 11:1, 36-38; 1 இரா. 18:13; 22:24-27; எரே. 20:1, 2; 28:10, 11; 32:2.
12. நமக்கு சிறந்த முன்மாதிரி யார், சகித்திருப்பதற்கு அவருக்கு எது உதவியது?
12 எல்லாவற்றையும்விட மிக கஷ்டமான சோதனையை இயேசு கிறிஸ்து சகித்தார், கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். சகித்திருப்பதற்கு அவருக்கு எது உதவியது என்பதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “தம்முன் வைக்கப்பட்டிருந்த எபி. 12:2) இயேசுவின் முன்மாதிரியை ‘கவனமாகச் சிந்தித்துப் பார்க்கும்படி’ கிறிஸ்தவர்களைப் பவுல் உற்சாகப்படுத்தினார். (எபிரெயர் 12:3-ஐ வாசியுங்கள்.) இயேசுவைப் போலவே, முதல் நூற்றாண்டில் இருந்த நிறைய கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால் இறந்துபோனார்கள்; அதில் அந்திப்பாவும் ஒருவர். (வெளி. 2:13) இவர்களுக்கு முன்பு வாழ்ந்த விசுவாசமுள்ள ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த உயிர்த்தெழுதலைவிட ‘மேன்மையான உயிர்த்தெழுதல்’ இந்தக் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. அதாவது, பரலோகத்தில் வாழ்வதற்காக இவர்கள் ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டு விட்டார்கள். (எபி. 11:35) இயேசு 1914-ல் ராஜாவாக ஆன கொஞ்ச காலத்துக்குப் பின்பு, இறந்துபோன பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், பரலோகத்தில் சாவே இல்லாமல் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்பட்டார்கள். இயேசுவோடு சேர்ந்து இவர்கள் மக்களை ஆட்சி செய்வார்கள்.—வெளி. 20:4.
சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் கழுமர வாதனையைச் சகித்தார்; இப்போது, கடவுளுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.” (பலமான விசுவாசத்தோடு இருந்த இன்றைய ஊழியர்கள்
13, 14. ருடால்ஃப் கிரேய்க்கன் என்னென்ன சோதனைகளைச் சகித்தார், அப்படிச் சகித்திருக்க அவருக்கு எது உதவியது?
13 லட்சக்கணக்கான கடவுளுடைய ஊழியர்கள் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார்கள். சோதனைகள் வரும்போது, கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி அவர்கள் ஆழமாக யோசித்துப் பார்க்கிறார்கள், கடவுளுக்கு உண்மையாக நிலைத்திருக்கிறார்கள். ருடால்ஃப் கிரேய்க்கன் என்பவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். இவர் 1925-ல் ஜெர்மனியில் ஏசா. 11:6-9) பூஞ்சோலை பூமியைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்கும் அதன்மீது விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் ருடால்ஃபுக்கு அது உதவியாக இருந்தது. அதனால், நாசி கெஸ்டாப்போவாலும் கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் ஸ்டாஸியாலும் பல வருடங்கள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டபோதும் அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்.
பிறந்தார். இவருடைய இளம் வயதில், இவருடைய பெற்றோர் பைபிள் காட்சிகள் இருக்கிற படங்களை சுவரில் தொங்கவிட்டிருந்தார்கள். “ஓநாயும் செம்மறியாடும், புலியும் ஒரு பையனும், பசுவும் சிங்கமும் சமாதானமாக இருப்பது போலவும் அவை எல்லாவற்றையும் ஒரு சின்ன பையன் வழிநடத்துவதைப் போலவும் ஒரு படம் இருக்கும்” என்று அவர் சொன்னார். (14 ருடால்ஃபுக்கு இன்னும் நிறைய சோதனைகள் வந்தன. அவருடைய அம்மா, ரேவன்ஸ்பிரக் சித்திரவதை முகாமில் விஷக் காய்ச்சலால் இறந்துபோனார். அவருடைய அப்பா, இனிமேல் தான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கப்போவதில்லை என்று ஓர் ஆவணத்தில் கையெழுத்து போட்டுவிட்டார். இவையெல்லாம் நடந்தும் ருடால்ஃப் விசுவாசமாக இருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்தார். பிறகு, கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். சிலி என்ற நாட்டில் மறுபடியும் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். பிறகு, பாட்ஸி என்ற ஒரு மிஷனரி சகோதரியைக் கல்யாணம் செய்தார். ஆனால், கல்யாணமான ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்களுடைய குழந்தை இறந்துபோனது. கொஞ்ச காலத்துக்குள் பாட்ஸியும் இறந்துபோனார். அப்போது பாட்ஸிக்கு வெறும் 43 வயதுதான்! இந்தப் பிரச்சினைகள் மத்தியிலும், ருடால்ஃப் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தார். அவருக்கு வயதானபோதும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் ஒரு ஒழுங்கான பயனியராகவும் மூப்பராகவும் சேவை செய்தார். அவருடைய வாழ்க்கை சரிதையை ஆகஸ்ட் 1, 1997 காவற்கோபுரம் பக்கங்கள் 20-25-ல் நாம் வாசித்துப் பார்க்கலாம். [1] (பின்குறிப்பு)
15. கொடுமைப்படுத்தப்பட்டாலும் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்கிற சகோதரர்களின் உதாரணங்களைச் சொல்லுங்கள்.
15 நம்முடைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இன்று கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டாலும் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்கிறார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ‘வாளை எடுக்க’ மறுத்ததால் எரிட்ரியா, சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள சிறையில் இருக்கிறார்கள். (மத். 26:52) உதாரணத்துக்கு ஐஸக், நெகடி, பாலோஸ் ஆகிய 3 சகோதரர்கள் 20 வருடங்களுக்கு மேல் எரிட்ரியாவில் உள்ள சிறையில் இருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக அவர்களால் கல்யாணம் செய்துகொள்ளவோ அவர்களுடைய வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளவோ முடியவில்லை. இருந்தாலும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள், அவர்களுடைய விசுவாசமும் பலமாக இருக்கிறது. அவர்களுடைய சிறைக் காவலாளிகளும்கூட இப்போது அவர்கள்மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். இந்தச் சகோதரர்களின் படம் jw.org வெப்சைட்டில் இருக்கிறது. சிறையில் அவர்கள் கஷ்டப்பட்டாலும், அந்தப் படத்தில் அவர்கள் சிரித்த முகத்தோடு இருக்கிறார்கள்.
16. எதைச் செய்ய பலமான விசுவாசம் உங்களுக்கு உதவும்?
16 யெகோவாவின் மக்கள் நிறைய பேர், இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கவில்லை என்றாலும் வறுமை, இயற்கைப் பேரழிவு, உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே ஆகியவர்களைப் போல் தங்களுடைய பேர்புகழை விட்டுவிட்டு யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுத்திருக்கிறார்கள். கடவுள்மீது இருக்கிற அன்பும் அவருடைய வாக்குறுதிகள்மீது இருக்கிற பலமான விசுவாசமும்தான் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய அவர்களுக்கு உதவுகிறது. தனக்கு உண்மையாக இருந்த ஊழியர்களை நீதியான புதிய உலகத்தில் உயிர்த்தெழுப்புவதன் மூலம் யெகோவா அவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும்.—சங்கீதம் 37:5, 7, 9, 29-ஐ வாசியுங்கள்.
17. உங்களுடைய விசுவாசம் பலமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
17 ‘எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதுதான்’ விசுவாசம் என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். அப்படிப்பட்ட விசுவாசம் நமக்கு இருக்க வேண்டுமென்றால், யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும், அவரிடம் தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, என்ன சோதனை வந்தாலும் நம்மால் சகிக்க முடியும். விசுவாசத்தோடு இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் பற்றிய கூடுதலான விஷயங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
^ [1] (பாரா 14) மே 8, 2002 விழித்தெழு!-வில் வெளிவந்த ஸ்லோவாக்யாவைச் சேர்ந்த அன்ட்ரே ஹனாக் என்பவரின் வாழ்க்கை சரிதையையும் பாருங்கள். அதனுடைய தலைப்பு “சோதனைகள் மத்தியிலும் சுடர்விட்ட என் நம்பிக்கை.”