காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2020  

ஆகஸ்ட் 3-30, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”

படிப்புக் கட்டுரை 23: ஆகஸ்ட் 3-9, 2020. மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் முன்னால் இருக்கிற முக்கியமான விஷயம் எது? அதை ஏன் மிக முக்கியமான விஷயம் என்று சொல்கிறோம், நமக்கு அதில் என்ன பங்கு இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கும் இவற்றோடு சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்ளும்போது, யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும்.

“உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்”

படிப்புக் கட்டுரை 24: ஆகஸ்ட் 10-16, 2020. சங்கீதம் 86:​11, 12-ல் தாவீது செய்த ஜெபத்தின் ஒரு பகுதியைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் பெயருக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் யெகோவாவின் பெயருக்கு பயந்து நடக்க வேண்டும்? யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போது, தவறு செய்வதற்கான தூண்டுதலிலிருந்து நாம் எப்படிப் பாதுகாக்கப்படுவோம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இதில் பார்ப்போம்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

கலாத்தியர் 5:​22, 23-ல் சொல்லியிருக்கிற குணங்கள் மட்டும்தான் ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களா’?

“நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்”

படிப்புக் கட்டுரை 25: ஆகஸ்ட் 17-23, 2020. நிறைய வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்த சிலர், சபையைவிட்டு வழிதவறிப் போயிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? அவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, தற்காலிகமாக யெகோவாவைவிட்டு வழிவிலகிப் போன பூர்வகால ஊழியர்களுக்கு அவர் உதவிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.

“என்னிடம் திரும்பி வாருங்கள்”

படிப்புக் கட்டுரை 26: ஆகஸ்ட் 24-30, 2020. செயலற்ற பிரஸ்தாபிகள் திரும்பிவர வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார். அதனால்தான், “என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று அவர்களை அழைக்கிறார். அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள நம்மால் உதவ முடியும். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.