Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

மத்தேயு 18:15-17-ல் இயேசு எப்படிப்பட்ட பாவத்தைப் பற்றி சொன்னார்?

இரண்டு பேருக்குள் இருக்கிற பிரச்சினையை அவர்களாகவே சரி செய்துகொள்வதைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். ஆனால், சரி செய்துகொள்ள முடியாத அளவுக்கு ஒரு பிரச்சினை இருந்தால், அது சபை நீக்கம் செய்யப்படும் அளவுக்கு ரொம்ப மோசமான பாவம் என்று அர்த்தம். உதாரணத்துக்கு, பழித்துப் பேசுவது, மோசடி செய்வது போன்ற பாவங்கள் இதில் அடங்குகின்றன.—w16.05, பக்கம் 7.

பைபிள் வாசிப்பிலிருந்து நன்மையடைய வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

‘இதிலிருந்து நான் என்ன கத்துக்கலாம்’ என்ற எண்ணத்தோடு படியுங்கள். ‘கத்துக்கிட்ட விஷயங்களை என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்’ என்று யோசித்துப் பாருங்கள். ‘மத்தவங்களுக்கு இது எப்படி பிரயோஜனமா இருக்கும்’ போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் படித்து முடித்த விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு நம்மிடம் இருக்கிற கருவிகளைப் பயன்படுத்துங்கள்.—w16.05, பக்கங்கள் 24-26.

ஒரு கிறிஸ்தவருக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக பாசமுள்ளவர்கள் இறக்கும்போது அவர்களுக்காக துக்கப்படுவது தவறா?

உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருப்பதற்காக ஒரு கிறிஸ்தவர் துக்கப்படாமல் இருக்க முடியாது. அன்பு மனைவி சாராள் இறந்தபோது ஆபிரகாம் புலம்பி அழுதார். (ஆதி. 23:2) காலப்போக்கில், துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.—wp16.3, பக்கம் 4.

எசேக்கியேல் 9-ஆம் அதிகாரத்தில், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவரும், வெட்டுகிற ஆயுதங்களை பிடித்திருந்த ஆறு மனுஷரும் யாரை குறிக்கிறார்கள்?

எருசலேமை அழிப்பதற்கும் அர்மகெதோனின்போது அழிவைக் கொண்டுவருவதற்கும் பயன்படுத்தப்படுகிற பரலோகப் படையை இவர்கள் குறிக்கிறார்கள். நவீன நாளைய நிறைவேற்றத்தில், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருப்பவர் இயேசுவைக் குறிக்கிறார். யாரெல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்று இவர் அடையாளம் போடுவார்.—w16.06, பக்கங்கள் 16-17.

ஒரு கிறிஸ்தவர் என்னென்ன விதங்களில் தன்னுடைய வாழ்க்கையை எளிமையாக்கலாம்?

உங்களுடைய அடிப்படை தேவைகள் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். அநாவசியமான செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற ஒரு பட்ஜெட் போடுங்கள். நீங்கள் பயன்படுத்தாத பொருள்களை அப்புறப்படுத்துங்கள். உங்களுக்கு இருக்கும் கடன்களை அடைத்துவிடுங்கள். வேலை நேரத்தை எப்படிக் குறைக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள். எப்படி அதிகமாக ஊழியம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள்.—w16.07, பக்கம் 10.

தங்கத்தைவிடவோ வெள்ளியைவிடவோ அதிக மதிப்புள்ளது என்று பைபிள் எதைப் பற்றி சொல்கிறது?

தங்கத்தைவிடவோ வெள்ளியைவிடவோ பரலோகத்திலிருந்து வரும் ஞானம்தான் அதிக மதிப்புள்ளது என்று யோபு 28:12, 15 காட்டுகிறது. அதைத் தேடும்போது, மனத்தாழ்மையாகவும் விசுவாசத்தில் உறுதியாகவும் இருக்க கடினமாக முயற்சி செய்யுங்கள்.—w16.08, பக்கங்கள் 18-19.

சகோதரர்கள் தாடி வைத்துக்கொள்வது பொருத்தமானதா?

சில கலாச்சாரங்களில், நேர்த்தியாக வெட்டப்பட்ட தாடி ஏற்றுக்கொள்ளப்படலாம், நாம் சொல்லும் செய்தியைக் கேட்பதற்கு அது தடையாக இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், சில சகோதரர்கள் தாடி வைக்காமல் இருப்பதற்கு முடிவு செய்யலாம். (1 கொ. 8:9) மற்ற கலாச்சாரங்களில் அல்லது இடங்களில், தாடி வைக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம்.—w16.09, பக்கம் 21.

தாவீது மற்றும் கோலியாத்தைப் பற்றிய பைபிள் பதிவை நாம் நம்பலாமா?

நம் காலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மிக உயரமான மனிதரைவிட கோலியாத் 6 அங்குலம்தான் (15 செ.மீ) உயரமாக இருந்தான். தாவீது ஒரு நிஜமான நபராக இருந்தார். பழமையான கல்வெட்டு ஒன்றில், “தாவீதின் வீடு” என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதோடு, இயேசுவும் தாவீதைப் பற்றி பேசியிருக்கிறார். பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இடங்கள் உண்மை என்பதை இன்றுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன.—wp16.5, பக்கம் 13.

அறிவும், புரிந்துகொள்ளுதலும், ஞானமும் எப்படி ஒன்றோடு ஒன்று வித்தியாசப்படுகின்றன?

அறிவு இருக்கும் ஒருவர் தகவல்களைச் சேகரிக்கிறார். புரிந்துகொள்ளுதல் இருக்கும் ஒருவர் அந்தத் தகவல்கள் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பார்க்கிறார். ஞானம் இருக்கிற ஒருவர் அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் சேர்த்து அதை நடைமுறைப்படுத்துகிறார்.—w16.10, பக்கம் 18.