விழித்தெழு! எண் 1 2018 | சந்தோஷப் பாதையில் செல்ல...
சந்தோஷமான வாழ்க்கைக்கு நம்பகமான ஆலோசனைகள் எங்கே கிடைக்கும்?
“குற்றமற்றவர்களாக வாழ்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 119:1.
உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பூத்துக்குலுங்க வேண்டுமா? காலங்காலமாகப் பலன் தந்திருக்கும் நம்பகமான நெறிமுறைகளை அலசி ஆராய்கிற இந்த ஏழு கட்டுரைகளையும் வாசித்துப் பாருங்கள்!
அந்தப் பாதையைக் கண்டுபிடிக்க...
நீங்கள் உங்களை ஒரு சந்தோஷமான நபர் என்று நினைக்கிறீர்களா? எது ஒரு நபரைச் சந்தோஷப்படுத்துகிறது?
மனத்திருப்தியும் தாராள குணமும்
ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஆனால், காசுபணமும் சொத்துசுகமும் நிலையான சந்தோஷத்தைத் தருமா? அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன?
உடல் ஆரோக்கியமும் மன உறுதியும்
உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சோகமே கதியென்று கிடக்க வேண்டியதுதானா?
அன்பு
ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அவர் கண்டிப்பாக அன்பு காட்ட வேண்டும், அன்பைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
மன்னிப்பு
எரிச்சலும் கோபமும்தான் வாழ்க்கை என்று இருந்தால், அந்த வாழ்க்கையில் சந்தோஷத்துக்கும் மனநிம்மதிக்கும் இடமில்லாமல் போய்விடும்.
வாழ்க்கையில் ஒரு நோக்கம்
வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குத் திருப்தியான பதில்களைக் கண்டுபிடிப்பது சந்தோஷத்துக்கு ரொம்பவே கைகொடுக்கும்.
நம்பிக்கை
தங்களுக்கும் தங்களுடைய அன்பானவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் இருக்கும்போது, நிறைய பேரால் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை.
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
எத்தனையோ விஷயங்கள் ஒரு நபரைச் சந்தோஷப்படுத்தலாம் அல்லது துக்கப்படுத்தலாம். வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் உங்களுக்கு இருக்கும் மனக்கவலைகளை போக்குகிற ஓர் அருமருந்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.