Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் மேல் உங்களுக்கே ஏன் மரியாதை இல்லை?

உங்கள் மேல் உங்களுக்கே ஏன் மரியாதை இல்லை?

உங்களை நீங்களே மதிப்பது ஏன் முக்கியம்?

தன்னையே மதிக்கிறவர்கள் அதாவது, சுயமரியாதை உள்ளவர்கள், வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள். அதைத் தைரியமாக சமாளிப்பார்கள்.

  • ஆராய்ச்சிகள் என்ன காட்டுகிறது என்றால், யாருக்கெல்லாம் அவர்கள்மீதே மரியாதை இல்லையோ அவர்களால் சரியாக சாப்பிட முடிவதில்லை. கவலையும் மன அழுத்தமும் சீக்கிரமாக அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. அதுமட்டுமல்ல, குடிப் பழக்கத்துக்கும் போதைப் பொருளுக்கும் அவர்கள் அடிமை ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

  • தன்னையே மதிக்கிறவர்கள், மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். அதனால், சுற்றியிருக்கிறவர்களோடு அவர்களால் ஒத்துப்போக முடியும். நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்கவும் முடியும். ஆனால், தன்னையே மதிக்காதவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால், இருக்கிற நண்பர்களையும் இழந்துவிடுவார்கள்.

  • தன்னையே மதிக்கிறவர்கள், எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதைத் தாக்குப்பிடித்து நிற்பார்கள். அவர்களுடைய குறிக்கோளை அடைவதற்கு என்ன தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், தன்னையே மதிக்காதவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள்கூட, தாண்ட முடியாத பெரிய மலை மாதிரி தெரியும். அதனால், சீக்கிரத்திலேயே அவர்கள் விட்டுக்கொடுத்து விடுவார்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்

தோள் கொடுக்கும் தோழர்களைக் கண்டுபிடியுங்கள். மரியாதையோடு நடந்துகொள்கிற, உங்கள்மேல் உண்மையிலேயே அக்கறை வைத்திருக்கிற, உங்களுக்குத் தோள் கொடுக்கிற நண்பர்களோடு பழகுங்கள்.

“உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும்போது, அவர்களுக்காக ஏதாவது செய்யும்போது அதுவும், திரும்ப எதுவும் செய்ய முடியாதவர்களுக்காக ஏதாவது செய்யும்போது உங்களால் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும். நீங்கள் செய்வதைப் பார்த்து யாரும் உங்களைப் பாராட்டவில்லை என்றாலும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.

தன்னையே மதிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். அதை செய்வதற்கு ஒரு வழி, பிள்ளைகளுக்கு வருகிற பிரச்சினைகளை முடிந்தவரைக்கும் அவர்களே சமாளிக்க விடுவதுதான். அப்படிச் செய்தால் பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ளவும் அதை சமாளிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அப்படிக் கற்றுக்கொண்டால் இப்போதும் சரி, வளர்ந்த பிறகும் சரி, பிள்ளைகள் சுயமரியாதையோடு இருப்பார்கள்.

“நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”—நீதிமொழிகள் 22:6.

நாங்கள் என்ன செய்கிறோம்

யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள் கூட்டங்களிலும் பைபிள் படிப்புகளிலும் மக்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். அதனால், அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. சுயமரியாதையோடும் இருக்க முடிகிறது.

எங்களுடைய கூட்டங்கள்

ஒவ்வொரு வாரமும் எங்களுடைய கூட்டங்களில் பைபிள் பேச்சுகளை கேட்போம். அதில் நம்மை நாமே எப்படி மதிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுப்பார்கள். எங்கள் கூட்டங்களுக்கு எல்லாருமே வரலாம். அனுமதி இலவசம். எங்கள் கூட்டங்களில் உங்களால் இதை எல்லாம் கற்றுக்கொள்ள முடியும்:

  • நீங்கள் கடவுளுக்கு ஏன் முக்கியமானவர்கள்

  • வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை எப்படித் தெரிந்துகொள்வது

  • உயிர் உள்ள வரை உயிர் நண்பர்களாக இருப்பது எப்படி

‘ஒருவர்மேல் ஒருவர் அக்கறையாக இருக்கும்’ உண்மையான நண்பர்களை உங்களால் அங்கு கண்டுபிடிக்க முடியும். —1 கொரிந்தியர் 12:25, 26.

இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள jw.org-ல் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற சின்ன வீடியோவைப் பாருங்கள்.

எங்களுடைய பைபிள் படிப்பு

எங்களுடைய இலவசமான பைபிள் படிப்பு, மதிப்பு மரியாதையோடு வாழ மக்களுக்கு உதவி செய்கிறது. இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிளை படிக்கிறோம். இந்தப் புத்தகத்தில் முக்கியமான வசனங்களும் அதை புரிந்துகொள்ள உதவும் குறிப்புகளும் இருக்கிறது. யோசிக்க வைக்கிற கேள்விகள், மனதைத் தொடும் வீடியோக்கள், படங்கள்கூட இருக்கிறது.

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள jw.org-ல் பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற சின்ன வீடியோவைப் பாருங்கள்.