Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுகம்

அறிமுகம்

குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்

இன்றைய குடும்பங்களில் ஏற்படுகிற பிரச்சினைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு . . .

  • அமெரிக்காவில், 50 வயதைத் தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை 1990-லிருந்து 2015-க்குள் இரண்டு மடங்காகவும், 65 வயதைத் தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை மூன்று மடங்காகவும் உயர்ந்தது.

  • பிள்ளைகளை எப்போதும் புகழ வேண்டும் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்; வேறு சிலரோ, பிள்ளைகளின் நன்மைக்காக அவர்களிடம் கறாராக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால், பெற்றோர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

  • இளம் பிள்ளைகள், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வது இல்லை.

ஆனால், சில குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன; அப்படியென்றால் . . .

  • திருமண வாழ்க்கை, செழிப்பானதாகவும் நிலையானதாகவும் இருக்க முடியும்.

  • பிள்ளைகளை அன்போடு கண்டித்து வளர்ப்பதற்கு பெற்றோர்களால் கற்றுக்கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை இளம் பிள்ளைகளால் இப்போதே வளர்த்துக்கொள்ள முடியும்.

எப்படி? விழித்தெழு! பத்திரிகையின் இந்த இதழ், குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான 12 ரகசியங்களைப் பற்றிப் பேசுகிறது.