Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2 நாம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு நாம்தான் காரணமா?

2 நாம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு நாம்தான் காரணமா?

ஏன் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?

நாம்தான் காரணம் என்றால், நம் கஷ்டங்களை நம்மால் குறைக்க முடியும் என்று அர்த்தம்.

சிந்திக்க...

இதுபோன்ற கஷ்டங்கள் வருவதில் மனிதர்களுக்கும் பங்கிருக்கிறது என்று ஏன் சொல்லலாம்?

  • வன்கொடுமை.

    நான்கு பேரில் ஒருவர், தங்களுடைய சிறு வயதில் உடல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும், மூன்று பெண்களில் ஒருவர், தங்களுடைய வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில், உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ வன்கொடுமையை (அல்லது இவை இரண்டையும்) அனுபவித்திருக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கணக்கிட்டிருக்கிறது.

  • உயிரிழப்பு.

    “2016-ல் தோராயமாக 4,77,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட 2018-ன் உலக சுகாதார புள்ளிவிவரங்கள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, சுமார் 1,80,000 பேர் அந்த வருஷத்தில் நடந்த போர்களிலும் கலவரங்களிலும் இறந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

  • உடல்நல பிரச்சினை.

    “100 கோடிக்கும் அதிகமான மக்கள் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். மரணத்துக்கு ஐந்து முக்கிய காரணங்களாக இருக்கிற இதய நோய், பக்கவாதம், சுவாச நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு புகையிலை வழிநடத்துகிறது” என்று நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் எழுத்தாளர் ஃப்ரான் ஸ்மித் எழுதுகிறார்.

  • ஏற்றத்தாழ்வு.

    “வறுமையில் வாழ்வது, தாழ்வாக நடத்தப்படுவது, இன வேறுபாட்டுக்கு மற்றும் பாலின வேறுபாட்டுக்கு ஆளாவது, அகதிகளாக வேறு இடத்துக்கு குடிமாறிப் போவது, போட்டி மனப்பான்மை நிறைந்த இடத்தில் வாழ்வது என எல்லாமே மன ரீதியான பிரச்சினைகளுக்குக் கொண்டுபோய் விடுகின்றன” என்று மனோதத்துவ நிபுணரான ஜே வாட்ஸ் சொல்கிறார்.

    அதிகம் தெரிந்துகொள்ள...

    கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

பைபிள் சொல்வது...

உலகத்தில் இருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மனிதர்கள்தான் காரணம்.

அதில் முக்கால்வாசி பிரச்சினைகளுக்கு, மக்களுக்குச் சேவை செய்வதாகச் சொல்லி அவர்களை அடக்கி ஒடுக்கி வாழ்க்கையைக் கஷ்டமாக்குகிற அரசாங்கங்கள்தான் காரணம்.

“மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.”பிரசங்கி 8:9.

நமக்கு வரும் கஷ்டங்களை நம்மால் குறைக்க முடியும்.

பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் ஆரோக்கியமாகவும் மற்றவர்களோடு சமாதானமாகவும் இருக்க முடியும்.

“அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம். ஆனால், பொறாமை எலும்புருக்கி.” நீதிமொழிகள் 14:30.

“எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.”எபேசியர் 4:31.