Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவீன வாழ்க்கைக்கு வழிகாட்டும் பழங்கால புத்தகம்

நவீன வாழ்க்கைக்கு வழிகாட்டும் பழங்கால புத்தகம்

பைபிள் ஒரு புனிதமான புத்தகம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அது உண்மைதான்! ஆனாலும், அது வெறும் ஒரு மதப் புத்தகம் கிடையாது. வாழ்க்கைக்கு வழிகாட்டும் முத்தான ஆலோசனைகளை தரும் ஒரு புத்தகம்!

பைபிளைப் படித்து, அதன்படி நடந்ததால் நிறைய பேர் பயனடைந்திருக்கிறார்கள். எப்படி என்று அவர்களில் சிலரிடம் கேட்கலாமா?

“முன்னாடி இருந்ததை விட இப்ப என் வாழ்க்கை ரொம்ப அமைதியா போயிட்டிருக்கு. மனசு ரிலாக்ஸா இருக்கு. நான் இப்ப சந்தோஷமா இருக்கேன்” என்று பூரிக்கிறார் ஃபியோனா.

“பைபிள படிச்சதுக்கு அப்புறம்தான், எதுக்காக வாழ்றோம்னு புரிஞ்சுகிட்டேன். இப்ப வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு” என்று சொல்கிறார் கினிட்கோ.

“என் வாழ்க்கை இப்ப ரொம்ப ரொம்ப சூப்பரா ஆகியிருக்கு. வேலை செய்ற நேரத்தை குறைச்சுகிட்டேன், குடும்பத்தோட நிறைய நேரம் செலவு பண்றேன்” என்கிறார் ஆன்ட்ரூ.

இவர்களைப் போல, உலகம் முழுவதும் எத்தனையோ பேர் பைபிளைப் படித்து பயனடைந்திருக்கிறார்கள். நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகள் அதில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

பைபிள் உதவும் சில வழிகள்

  • உடல்நலம் காக்க . . .

  • மனநலம் மேம்பட . . .

  • உறவும் நட்பும் இனிக்க . . .

  • பண பிரச்சினைகளைச் சமாளிக்க . . .

  • கடவுளிடம் நெருங்கி வர . . .

பைபிள் ஒரு புனித புத்தகம் மட்டும் கிடையாது. அன்றாடம் தேவைப்படும் அருமையான ஆலோசனைகளை அது அள்ளித்தருகிறது. எப்படி என்று தெரிந்துகொள்ள அடுத்து வரும் பக்கங்களைத் திருப்புங்கள்.