Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காபி குடித்தால் கொழுப்பு ஜாஸ்தியாகுமா?

காபி குடித்தால் கொழுப்பு ஜாஸ்தியாகுமா?

காபி குடித்தால் கொழுப்பு ஜாஸ்தியாகுமா?

பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்

ஃபில்டர் செய்யப்படாத காபி குடித்தால் கொழுப்பு ஜாஸ்தியாகும் என்பதாக நெதர்லாந்து நாட்டு வாகினிங்கன் வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“ஃபில்டர் செய்யப்படாத” என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. ஏன்? அறிவியல் ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து அமைப்பு வெளியிட்ட ரிசர்ச் ரிப்போர்ட்ஸ் என்ற நியூஸ்லெட்டர் இதற்கான காரணத்தைச் சொல்கிறது. காபி கொட்டையில் கொழுப்பின் அளவை அதிகமாக்கும் கேஃபஸ்டால் (cafestol) என்ற ஒரு பொருள் காணப்படுகிறது. கொதிக்கும் நீரை காபித் தூளின்மீது நேராக ஊற்றும்போது கேஃபஸ்டால் பிரிந்து வருகிறது. துருக்கிய காபி தயாரிக்கும்போது செய்வது போல நைசாக அரைத்த காபித்தூளை தண்ணீரில் போட்டு பல முறை கொதிக்க வைத்தாலும், பிரெஞ்சு பிரஸ்ஸில் இருப்பது போல் பேப்பர் ஃபில்டருக்குப் பதிலாக உலோக ஃபில்டர் பயன்படுத்தினாலும் இதுதான் நடக்கிறது. ஒரு பேப்பர் ஃபில்டரை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் கேஃபஸ்டால் அப்படியே தங்கிவிடுகிறது.

ஃபில்டர் செய்யப்படாத ஒரு கப் காபியில் நான்கு மில்லிகிராம் வரை கேஃபஸ்டால் இருக்கலாம், இது கொலஸ்ட்ரால் அளவை சுமார் ஒரு சதவீதம் அதிகரித்துவிடும். எஸ்பிரஸோ காபியிலும்கூட பேப்பர் ஃபில்டர் பயன்படுத்தப்படுவதில்லை, ஆகவே அதிலும் கேஃபஸ்டால் இருக்கிறது. எஸ்பிரஸோ காபியை கொஞ்சமாக அருந்தினால் கேஃபஸ்டாலும் குறைவாகவே இருக்கும்​—⁠ஒரு கப்பில் ஒன்று அல்லது இரண்டு மில்லிகிராம் மட்டுமே இருக்கலாம். நாளொன்றுக்கு சிறிய கப்பில் எஸ்பிரஸோ காபியை ஐந்து முறை அருந்தினால் உடலின் கொழுப்பு 2 சதவீதம் அதிகமாகும் என்பதாக ரிசர்ச் ரிப்போர்ட்ஸ் எச்சரிக்கிறது.

ஆக மொத்தத்தில், கேஃபஸ்டால் இல்லாத காபிக்கு பேப்பர் ஃபில்டர் பயன்படுத்த வேண்டும்.