Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கைக்கு எட்டியது . . .

கைக்கு எட்டியது . . .

கைக்கு எட்டியது . . .

ஸ்லோவினியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளை அலுவலகத்திற்கு ஒரு பிஸினஸ்மேன் இப்படி கடிதம் எழுதினார்:

“காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை எனக்கு தவறாமல் அனுப்பி வைப்பதற்கு ரொம்ப நன்றி. அவற்றை எங்கு போனாலும் எடுத்துச் செல்வேன். டிராவல் பண்ணும்போதும், பிஸினஸ் மீட்டிங்கிற்காக காத்திருக்கும்போதும் படிப்பேன்.

“பத்திரிகைகளில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த புத்தகங்களையும் எனக்கு அனுப்பி வையுங்கள்: உங்கள்மீது அக்கறையுள்ள சிருஷ்டிகர் இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்.

“எதற்கும் இரண்டு இரண்டு பிரதிகள் அனுப்பிவிடுங்கள். ஏனென்றால், படிக்க கையில் எடுக்கும்போதெல்லாம் யாராவது கேட்டு வாங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கும் இன்டரஸ்ட் வந்துவிடுகிறது. எனக்கே வைத்துக்கொள்ளதான் ஆசை. அதனால் கொடுக்க மனதே வராது, ஆனாலும் கொடுத்துவிடுவேன்.”

வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற 32 பக்க சிறுபுத்தகம் உங்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம். நம்மைப் படைத்த கடவுள் நமக்காக அருமையான ஒரு எதிர்காலத்தை வைத்திருக்கிறார், சீக்கிரம் அந்த எதிர்காலம் நிகழ்காலமாகப் போகிறது. இதையே இப்புத்தகம் விளக்கும். இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உங்கள் அருகாமையில் வசிக்கும் எமது பிரதிநிதி உங்களை சந்திக்க ஏற்பாடு செய்வோம். விருப்பமானால், இந்தக் கூப்பனை பூர்த்தி செய்து கீழ்காணும் விலாசத்திற்கு உடனே அனுப்புங்கள். அல்லது பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள்.

◻ உங்கள் பிரதிநிதி என்னை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்.

◻ இலவசமாய் பைபிளை கற்றுக்கொள்வது சம்பந்தமாக என்னை தொடர்புகொள்ளுங்கள்.