Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘மிகச் சிறந்த பத்திரிகைகள்’

‘மிகச் சிறந்த பத்திரிகைகள்’

‘மிகச் சிறந்த பத்திரிகைகள்’

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் லிஸல் என்ற 18 வயது பெண், விழித்தெழு! பதிப்பாசிரியர்களுக்கு இப்படி எழுதினாள்:

“நான் இப்போது கல்லூரி லெவலில் ஒரு வரலாற்று கோர்ஸில் சேர்ந்திருக்கிறேன். இதற்கு நாங்கள் விரிவான ஒரு ஆய்வு கட்டுரையை எழுதவேண்டும். ஜெர்மனியில் நாசிக்களின் ஆட்சியில் நாசிஸத்துக்கு யெகோவாவின் சாட்சிகள் பணியவில்லை என்ற தலைப்பில் நான் எழுத தீர்மானித்திருக்கிறேன். 1998, ஜூலை 8 விழித்தெழு! வெளியிட்ட, ‘யெகோவாவின் சாட்சிகள்​—⁠நாஸி கொடுமையை அஞ்சா நெஞ்சோடு எதிர்கொண்டனர்’ என்ற கட்டுரையின் முடிவில் குறிப்பிடப்பட்டிருந்த ரெஃபரன்ஸை எனக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னே அபாரமான ஒரு ஆய்வுக் கட்டுரை! எத்தனை தர்க்கரீதியாக எழுதப்பட்டுள்ளது! அதிலுள்ள உணர்ச்சிகளையும் உண்மைகளையும் பாதி என்னால் வெளிக்கொண்டுவர முடிந்தால்கூட அது என்னுடைய ஆய்வுக்கு மதிப்பெண் போடும் குழுவினருக்கு பெரிய அளவில் சாட்சி கொடுப்பதாக இருக்கும்.

“மிகச் சிறந்த பத்திரிகைகளை பிரசுரிப்பதற்காக உங்களுக்கு நன்றி. ஒவ்வொரு பிரதியும் பள்ளியில் அஸைன்மன்ட் எழுத உதவியளிக்கிறது. என் பள்ளியில் கற்றுத்தரப்படும் எதையும்விட இது மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. ஒவ்வொரு பேப்பரை நான் எழுதி முடிக்கையிலும் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை இது வளர்க்கிறது. உங்கள் முயற்சிகளை மனமார போற்றுகிறேன்.”

[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]

நடு ஃபோட்டோ: Państwowe Muzeum Oświęcim-Brzezinka, நன்றி: USHMM Photo Archives