Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை”

“எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை”

“எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை”

“ஸ்ட்ரோக் [பக்கவாதம்] பற்றி விழித்தெழு! வெளியிட்ட கட்டுரைகள் [பிப்ரவரி 8, 1998 ] என் அம்மாவின் உயிரையே காப்பாற்றிவிட்டது” என எழுதினார் காரல். கனடாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளைக் காரியாலயத்திற்கு அவர் இக்கடிதம் எழுதினார். அவரது அம்மாவிற்கு திடீரென ஒருநாள் இடது கை மரத்துப்போனது, விடிவதற்குள் பார்வை மங்க ஆரம்பித்துவிட்டது. “இன்னும் ஒரு நாள் பார்த்துவிட்டு அப்புறம் டாக்டரிடம் போகலாம் என நினைத்தார்கள். ஆனால் ஸ்ட்ரோக் பற்றிய விழித்தெழு!-வை உடனடியாக எடுத்துப் படிக்கும்படி ஒன்றுக்கு நாலு தடவை சொன்னேன். கால் மணிநேரத்தில் மறுபடியும் எனக்கு போன் வந்தது. நான் இப்பவே ஹாஸ்பிட்டல் கிளம்பிடறேன் என்றார். டாக்டர்கள் பரிசோதனைக்காக அம்மாவை ராத்திரி அங்கேயே தங்கவைத்துவிட்டார்கள். சரியான நேரத்தில் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தீர்கள் என அடுத்த நாள் சொன்னார்கள். ஏனெனில் அவருக்கு ஓரிரு வார்னிங் ஸ்ட்ரோக்குகள் வந்திருந்ததாம். இந்தக் கட்டுரைகளுக்காக உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.”

உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் ஏற்ற நடைமுறையான ஆலோசனைகள் பைபிளில் உண்டு. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற அருமையான 32-பக்க சிற்றேடு பக்கங்கள் 20, 21, 25, 26-⁠ல் இந்த உண்மையை விளக்குகிறது. இப்புத்தகத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறோம். கீழுள்ள கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ பக்கம் 5-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள்.

◻ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.

◻ இலவசமாய் பைபிளை கற்றுக்கொள்வது சம்பந்தமாக என்னை தொடர்புகொள்ளுங்கள்.