Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எடை “இளைஞர் கேட்கின்றனர் . . . குண்டாகிவிடும் பயத்தை நான் வெல்வது எப்படி?” (மே 22, 1999) என்ற கட்டுரைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது கொஞ்ச காலமாக, என் மனதையும் எண்ணத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த விஷயம் என் உடலமைப்பும் எடையுமே. கண்ணாடியில் என்னை பார்க்கும்போது என்னையே நம்ப முடியவில்லை, எனக்கே அசிங்கமாக இருக்கிறது. நான் எடை பார்க்கும் மெஷினில் ஏறுவதே இல்லை. ஆனால் இந்தக் கட்டுரை, நம்முடைய உடல் அல்ல உள்ளான ஆளே மிக முக்கியம் என்பதை உணர்த்தியது.

எல்.ஆர்., பிரான்ஸ்

ஊனம் என்னுடைய பெரும்பாலான நேரத்தை சக்கர நாற்காலியிலேயே கழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என் மனைவி எப்போதும் களைப்பாலும் (CFS) மிகுந்த மன உளைச்சலாலும் அவதிப்படுகிறாள். “ஊனமுற்றோருக்கு நம்பிக்கை” (ஜூன் 8, 1999) என்ற தொடர் கட்டுரை, பேரிழப்பு ஏற்படுகையில் துக்கிப்பது இயல்பே என்று குறிப்பிட்டது. அதோடு, “எல்லா ஊனங்களும் மறையும் காலம்” என்ற கட்டுரையிலுள்ள அழகிய படம், எங்கள் வியாதிகள் எல்லாம் சுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கே.டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்

நான்கு வயதாயிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் என் இடது காலை இழந்தேன். என்னை அடிக்கடி கொடூரமாய் தாக்கிய மன உளைச்சல் எனும் புயலை சமாளிக்க உங்கள் தொடர் கட்டுரை உதவி செய்தது. இன்று நிலவிவரும் இந்த வெறுப்புணர்வை எதிர்த்து போராடும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

எ.ஜே.டி.பி., பிரேஸில்

மற்ற எல்லாரையும் போல ஊனமுற்றோருக்கும், எண்ணங்களும் உணர்ச்சிகளும் இருக்கிறது என்பதை மக்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஒன்றும் ஜடங்கள் அல்ல, நாங்களும் புண்படக்கூடும், புண்படுகிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஊனமுற்றவரை மக்கள் பார்க்கும்போது ஏதோ சர்க்கஸ் கோமாளியை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள், மோசமாக கமெண்ட் அடிக்கிறார்கள், அவரை ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை என்று சொல்லலாம். ஊனமுற்றவர் ஒன்றும் முட்டாளோ சோம்பேறியோ ஆதரவற்ற அனாதையோ அல்ல. எங்களுக்கு சான்ஸ் கிடைத்தால், நன்றாக சமைப்போம், சுத்தம் செய்வோம், கடைக்கு செல்வோம், குடும்பத்தை கவனித்துக்கொள்வோம், எங்களால் முடிந்த வேலையை செய்வோம், ஏன் வாகனங்களையும் ஓட்டிச் செல்வோம். யெகோவாவை பற்றியும் அவருடைய அன்பான, கனிவான வழிகளை பற்றியும் கற்றுக்கொண்டதுதான், நான் என் வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து ஓட உதவியிருக்கிறது. நான் இன்னும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆகவில்லை, இருந்தாலும், எதிர்காலத்தில் நானும் சாட்சியாக விரும்புகிறேன்.

எ.ஜி., ஐக்கிய மாகாணங்கள்

கடவுள் பார்வையில் அருமையானவர்கள் நான் அடிக்கடி சோர்வாக, எதற்கும் லாயக்கற்றவளாக உணர்ந்தேன்; காரணம் எதையும் முழுமையாக செய்த திருப்தியில்லை. சில சமயத்தில் முழுநேர ஊழியக்காரியாக இருப்பதற்கே தகுதியற்றவள் என்று என்னை நானே நொந்துகொள்வதுண்டு. ஆனால், “பைபிளின் கருத்து: கடவுள் பார்வையில் நீங்கள் மிக அருமையானவர்கள்!” (ஜூன் 8, 1999) என்ற கட்டுரை என்னுடைய சிந்தனைகளை முற்றிலும் மாற்றியது. இப்படிப்பட்ட உணர்ச்சியும்கூட, யெகோவாவை சேவிப்பதிலிருந்து நம்மை தடுக்க சாத்தான் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்று என்பதை புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.

எல்.டபிள்யூ., கனடா

அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது. யெகோவா என்னுடைய ஜெபங்களையெல்லாம் கேட்பதே இல்லை என்று இதுவரை நினைத்துவந்தேன். ஆனால் உங்கள் கட்டுரையை வாசித்ததிலிருந்து, யெகோவாமீதும் ஏன் என்மீதும்கூட புது நம்பிக்கை பிறந்திருக்கிறது. இதுபோன்று ஆறுதலளிக்கும் கட்டுரைகளை தயவுசெய்து தொடர்ந்து வெளியிடுங்கள்.

ஆர்.வி.டி., பெல்ஜியம்

நான் செய்த சில தவறுகள் என் சுயமரியாதையை குழிதோண்டி புதைத்துவிட்டன. அந்தக் கசப்பான அனுபவத்தால் ஏற்பட்ட ரணம் இன்னும் ஆறாது வலித்துக்கொண்டிருக்கிறது. இன்று யெகோவா தேவனோடு உள்ள உறவு மற்றும் அவருடைய அன்பு, மனிதர்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டது என்ற அறிவு என்னை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்திருக்கிறது.

வி.எஸ்.கே., பிரேஸில்

அந்த கட்டுரையை இப்போதுதான் ஆடியோ கேஸட்டில் கேட்டேன். கடந்த 44 வருடங்களாக இருண்ட உலகில் குருடனாக காலத்தை கழித்துவிட்டேன். நான் ஒரு கிறிஸ்தவனாக முழுக்காட்டுதல் எடுத்த பிறகும்கூட, பிரயோஜனமற்றவனாக தான் என்னை கருதினேன். ஆனால் இந்த கட்டுரை என் நெஞ்சை நெகிழவைத்தது. நாம் நம்மை நோக்கும் விதத்தில் கடவுள் நம்மை நோக்குவதில்லை என்பதற்காக அவருக்கு நன்றி.

எ.கே., இத்தாலி

நான் எப்போதும் சோகமயமாய் ஆறுதல் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் அந்த கட்டுரையை வாசித்தபோது, யெகோவா என்னுடன் அன்பாக பேசுவது போல் இருந்தது. நம்முடைய யோசனைகளை அல்லது சிந்தனைகளை மாற்றுவது மிகக் கடினமே, ஆனால் “அன்புள்ள தகப்பனாக, யெகோவா ‘சமீபமாய்’ இருந்து—நம்மை கருத்தாய் கவனித்து, உதவ தயாராய் இருக்கிறார்—சங்கீதம் 147:1, 3” என்று அந்த கட்டுரை சொன்னதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

கே.எஃப்., ஜப்பான்