உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
(கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் இந்த வினாடிவினாவுக்கான விடைகளைக் காணலாம்; பக்கம் 19-ல் விடைகள் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. விஷயங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் கேட்போர் மனதைச் சென்றெட்ட எந்த வார்த்தைகளை இயேசு அடிக்கடி பயன்படுத்தினார்? (மத்தேயு 5:18)
2. “சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும்” சமம் என்று யாரைப்பற்றி சொல்லப்பட்டது? (1 நாளாகமம் 12:8-14)
3. தாவீதின் வலிமைமிக்க வீரர்களான யோவாப், அபிசாய், மற்றும் ஆசகேலைப் பற்றி சொல்லப்படும்போது யாருடைய பெயரும் அடிக்கடி சொல்லப்படுகிறது? (2 சாமுவேல் 2:18)
4. தம்முடைய நாமத்தினிமித்தம் ஒருவர் பகைக்கப்பட்டாலும், அந்த மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று இயேசு சொன்னார்? (மாற்கு 13:13)
5. யூதர்கள்மீது ஆமானுக்கு இருந்த பகைமையின் விளைவாக கொல்லப்பட்ட ஆமானின் பிள்ளைகள் எத்தனை பேர்? (எஸ்தர் 9:7, 9, 10)
6. தீர்க்கதரிசன நியமிப்பை ஏசாயா நிறைவேற்றுவதற்காக அவருடைய வாயை நெருப்புத்தழலால் தொட்டது எந்த வகை ஆவி சிருஷ்டி? (ஏசாயா 6:6)
7. ஏரோதின் ‘காரியக்காரனும்’ இயேசுவிற்கு ஊழியம் செய்து கொண்டிருந்த யோவன்னாளின் கணவனுமானவன் யார்? (லூக்கா 8:3)
8. எந்த பொறுப்புமிக்க ஸ்தானத்தை அடைய முயற்சிக்குமாறு சபையிலுள்ள ஆண்களை பவுல் உற்சாகப்படுத்தினார்? (1 தீமோத்தேயு 3:1)
9. ‘ஏதேனிலிருந்து ஓடிய நதியிலிருந்து’ கிளைகளாக பிரிந்து சென்ற நான்கு ஆறுகளின் பெயர் என்ன? (ஆதியாகமம் 2:10-14)
10. கொஞ்சம் புளித்தமா என்னவும் செய்யக்கூடும் என்று பவுல் சுட்டிக் காண்பித்தார்? (கலாத்தியர் 5:9)
11. “பூமியெங்கும் ஜனங்கள்” பரவுவதற்கு காரணமான நோவாவினுடைய மூன்று பிள்ளைகளின் பெயர் என்ன? (ஆதியாகமம் 9:18, 19)
12. சாமுவேல் தீர்க்கதரிசியின் தகப்பன் யார்? (1 சாமுவேல் 1:19, 20)
13. யெஸ்ரேல் பள்ளத்தாக்குக்கு எதிரே இருந்த, வரலாற்று புகழ்பெற்ற எந்த நகரத்தைச் சுற்றி அநேக பயங்கரமான போர்கள் நடந்துள்ளன? (நியாயாதிபதிகள் 5:19)
14. தந்திரமாக தப்பித்துக்கொண்ட கிபியோனியர்கள், என்ன வேலை செய்யும்படி நியமிக்கப்பட்டனர்? (யோசுவா 9:27)
15. இயேசு தாமே தெரிந்தெடுத்திருந்த 12 சீஷர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது? (மத்தேயு 10:2)
16. தமக்கு மட்டுமே பொருந்தும் எந்தப் பெயர்களால் தம்முடைய சீஷர்கள் அழைக்கப்படக் கூடாது என இயேசு சொன்னார்? (மத்தேயு 23:8, 10)
17. எபிரெயர் புத்தகத்தை எந்த இடத்தில் பவுல் எழுதினார்? (எபிரெயர் 13:24)
18. மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதை வெளிப்படுத்த யோபு என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார்? (யோபு 19:20)
19. பண்டைய காலங்களில் தானியம், தண்டிலிருந்தும் பதரிலிருந்தும் எங்கே பிரிக்கப்பட்டது? (ரூத் 3:3)
20. யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் வெறுத்ததற்குரிய காரணங்கள் யாவை? (ஆதியாகமம் 37:3-11)
வினாடி வினாவுக்கான விடைகள்
1. “மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”
2. அரசனான சவுலினிமித்தம் தாவீது இன்னும் மறைந்திருந்தபோது வனாந்தரத்தில் அவருடன் சேர்ந்துகொண்ட காத் கோத்திரத்தின் துடிப்புமிக்க வலிமைவாய்ந்த பலசாலிகள்
3. அவர்களின் தாயாகிய செருயா
4. முடிவுபரியந்தம் நிலைத்திருக்க வேண்டும்
5. பத்து பேர்
6. ஒரு சேராபீன்
7. கூசா
8. ‘கண்காணிப்பு’
9. பைசோன், கீகோன், இதெக்கேல், ஐபிராத்து
10. பிசைந்த மாவனைத்தையும் புளிப்பாக்கிவிடும்
11. சேம், காம், யாப்பேத்
12. எல்க்கானா
13. மெகிதோ
14. ‘சபையாருக்கும், யெகோவாவின் பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும்’ ஆயினர்
15. அப்போஸ்தலர்கள்
16. ரபீ மற்றும் குரு
17. இத்தாலியா
18. “என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது”
19. போரடிக்கும் களத்தில்
20. அவனுடைய தகப்பன் அவனை அதிகமாக நேசித்ததாலும் அவன் கண்ட சொப்பனங்களாலும்