Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

இனிதே வாழ இறையியல் “உலகை கவனித்தல்” என்ற கட்டுரையில் “இனிதே வாழ இறையியல்” (ஜூன் 22, 1999) என்ற தலைப்பில் வந்த செய்தி மிகவும் தவறாகும். எல்லா இடங்களிலுமுள்ள பெந்தெகொஸ்தே சர்ச்சுகளும் கரிஸ்மாடிக் சர்ச்சுகளும் சரியான பைபிள் நியமங்களின் அடிப்படையில் கொடுப்பதையே ஊக்குவிக்கின்றன. கட்டுரை குற்றம் கண்டுபிடிக்கும் கண்ணோடு எழுதப்பட்டுள்ளது.

கே. பி., ஐக்கிய மாகாணங்கள்

எங்கள் செய்தி லூத்தரன் இறையியலர் வோண்டா டைபல்ட் என்பவரின் வார்த்தைகளை மிகவும் திருத்தமாக, அப்படியே மேற்கோள் காட்டியிருந்தது. உவார்ல்ட் கவுன்சில் ஆப் சர்ச்சஸின் “இஎன்ஐ புல்லட்டின்” என்ற செய்திமடல் அவ்வாறே வெளியிட்டிருந்தது. அதில் சொல்லியிருந்தபடி, அந்தச் செய்திமடலின் கட்டுரை பெந்தெகொஸ்தே மற்றும் கரிஸ்மாட்டிக் சர்ச்சுகளைப் பற்றி பொதுவாக சொல்வதில்லை, ஆனால் லத்தீன் அமெரிக்காவில் உள்ள சில சர்ச்சுகளைப் பற்றியே குறிப்பாக இவ்வாறு சொன்னது.​—⁠ED.

வின்லேண்ட் “எங்கே அந்தப் புராண வின்லேண்ட்?” (ஜூலை 8, 1999) கட்டுரைக்கு உங்களுக்கு நன்றிகூற நான் விரும்புகிறேன். கடல்கொள்ளைகளைப் பற்றி நான் அறிய ரொம்ப நாளாக ஆசையாயிருந்தேன், இது பற்றி நீங்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்ததுண்டு. கடைசியில் என் ஆசை நிறைவேறிவிட்டது.

எஸ். எஸ்., ஜப்பான்

உங்கள் கட்டுரைகள் கல்விபுகட்டுபவையாக உள்ளன. ஆனால் ஒரு சந்தேகத்தை நிவிர்த்தி செய்துகொள்ள எனக்கு ஆசை. “வைக்கிங்” என்ற பிரபலமான வார்த்தையை பயன்படுத்துகையில் அனேக சரித்திராசிரியர்கள் ஐரோப்பிய கடலோரத்தை சூறையாடின நார்வே நாட்டு கடற்கொள்ளைக்காரர்களை குறிப்பிடவே பயன்படுத்துகிறார்களே.

ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

நார்வேயிலும் கிரீன்லாந்திலும் மதிப்புக்குரிய பல சரித்திர ஆசிரியர்களிடம் “விழித்தெழு!” கருத்து கேட்டது. “வைக்கிங்” (ஸ்கான்டினேவிய கடற்கொள்ளை வீரர்) என்ற பதத்தை பயன்படுத்தும் விஷயத்தில் சரித்திர ஆசிரியர்களிடையே சில கருத்து வேற்றுமைகள் ஒருவேளை இருந்தாலும் ஆங்கிலம் பேசும் உலகில் “வைக்கிங்” மற்றும் “நார்ஸ்மென்” (நார்வே நாட்டு கடற்கொள்ளை வீரர்) என்ற பதங்கள் ஒரே பொருளுடையவை.​—⁠ED.

சிறையில் உயிர்தப்பியவர் “கடவுளே எங்கள் சகாயர்” (ஜூன் 22, 1999) கட்டுரைக்காக என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றிகூற நான் விரும்புகிறேன். ஃபிரான்சிஸ்கோ கோவானா எவ்வாறு சத்தியத்தைக் கற்று யெகோவாவை சேவிப்பதையே தன்னுடைய வாழ்க்கையில் முதலாவதாக வைத்தார் என்பதை வாசித்தபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. மொசாம்பிக்கில் என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் பட்ட வேதனையைப் பற்றி வாசித்தபோது உண்மையில் விசுவாசத்தைப் பலப்படுத்தியது.

ஜே. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

நோயுற்ற பெற்றோர் “இளைஞர் கேட்கின்றனர் . . . அம்மாவுக்கு ஏன் இந்த தீராத வியாதி?” (ஜூலை 22, 1999) கட்டுரையை வாசித்து நான் நெகிழ்ந்து போனேன். என்னைப் போலவே நோயுற்றிருக்கும் அன்பானவர்களை கவனித்துக்கொள்ளும் பாக்கியம் இன்னும் மற்ற இளைஞருக்கும் இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் பாட்டி எங்களோடு இருக்கிறார்கள், நான்கு மாதங்களாக அவர்கள் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். அவர்களைக் கவனித்துக்கொள்வது சுமையாகவும் களைப்பாகவும் இருப்பதை நான் உணர ஆரம்பித்தேன். அப்போதுதான் எனக்கு மிகவும் தேவையாயிருந்த பலத்தை கட்டுரையிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். யெகோவாவின் ஆதரவு இருப்பதைக் குறித்து நம்பிக்கையளித்தது.

ஜே. பி., பிலிப்பீன்ஸ்

இந்தக் கட்டுரை எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது, மனச்சோர்விலிருக்கும் என் அம்மாவுக்கு ஆதரவாக இருக்க பலத்தை அளித்தது. நிலைமையை யதார்த்தமாக புரிந்துகொண்டு அதிகமான அனுதாபத்தையும் புரிந்துகொள்ளுதலையும் சாதுரியத்தையும் காண்பிக்க கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகள் மிகவும் பிரயோஜனமாக இருந்தன.

ஜி. எல்., இத்தாலி

கட்டுரை சரியான நேரத்தில் வந்தது. எனக்குப் புற்றுநோய். என் மகன் என்னோடு இருக்கிறான். என் மகன் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை, அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே எனக்குப் புரியவில்லை. அவனுடைய உணர்ச்சிகளை இந்தக் கட்டுரை மிகவும் துல்லியமாக விவரித்திருந்தது. இந்தக் கட்டுரைகள் இளைஞருக்கு மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. அவை அடிப்படையில் வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன.

ஆர். ஸெட்., ஜெர்மனி

ஆவிக்குரிய விதமாக சுறுசுறுப்பாக நிலைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவிசெய்தது. நம் வாழ்க்கையை கடவுளுடைய ராஜ்யத்தின்மீது ஒருமுகப்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே நோயுற்றிருக்கும் ஒருவருக்கு உதவிசெய்ய முடியும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

பி. இ., ஆஸ்டிரியா