“நான் கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்”
“நான் கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்”
கனடாவிலுள்ள எட்மான்ட்டனில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் பின்வரும் கடிதத்தை ஒருவர் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
“அன்புள்ள தூதுவரே:
“தன்னை அறியாமலேயே என்னுடைய வாழ்வில் ஓர் அற்புதத்தை நிகழ்த்திய நபருக்கு நன்றி நவிழவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
“சில வாரங்களுக்கு முன்பு, எனக்கும் என்னுடைய கணவருக்கும் சூடான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. ‘பிரச்சினை கைமீறி போய்விட்டது, இனிமேல் என்ன செய்ய.’ இப்படி சொல்லி வாய்மூடவில்லை, ‘காலிங்’ பெல் அடித்தது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்னுடைய வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார், அதனால் ஒளிந்துகொள்ள முடியவில்லை.
“நான் கதவை திறந்தேன், அவர் சொன்னதை கவனமாக கேட்க முடியாத அளவுக்கு கலங்கிப்போய் இருந்தேன். ‘பிள்ளைகள்’ ‘குடும்பம்’ என்று ஏதோ அவர் சொன்னதுதான் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை அவருடைய பையிலிருந்து எடுத்தார். அந்தத் தலைப்பை பார்த்தவுடன் என்னுடைய கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே அவர், என்னை தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்தப் புத்தகத்தைக் கொடுத்துச் சென்றுவிட்டார்.
“இதிலென்ன அற்புதம்? கடவுள் ஒரு தூதுவரையும் அனுப்புகிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியாதபோது, தவிக்க வேண்டியதில்லை, எல்லாவற்றையும் கடவுள் அறிந்திருக்கிறார். நான் கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என எனக்கு உணர்த்தப்பட்டது. நன்றி.”
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் குடும்பத்திலுள்ள எல்லாருக்கும் பயனளிக்கும். இதோ, நல்ல அறிவுரை தரும் அதிகாரங்களின் தலைப்புகள் சில: “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்,” “குடும்பத்தை சேதப்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.”
உங்களுக்கும் ஒரு பிரதி வேண்டுமா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறோம். தயவுசெய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். குடும்ப பிரச்சினைகளைத் தீர்க்கவும் கடவுளின் ஆதிநோக்கத்தின்படி குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி காண்பதற்கும் உதவும் நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
□ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.
□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.