Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

முன்னாள் குற்றவாளி “அன்று கெர்ஜிக்கும் சிங்கம்​—⁠இன்று சாதுவான ஆட்டுக்குட்டி” (ஆகஸ்ட் 8, 1999) என்ற தலைப்பில் வெளியான என்ரீக் டோர்கெஸ் ஜூனியர் என்பவரின் அனுபவத்தை நான் எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதை கட்டாயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். நம்முடைய கடவுள் யெகோவா எவ்வளவு அன்பும் இரக்கமுமுள்ளவர், அவர் நம்மிடம் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என்பதை அது சிறப்பித்துக் காட்டியது. அதோடு நம்முடைய பிள்ளைகள் கடவுளுடைய தராதரங்களைவிட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டாலும், அவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவரும் முயற்சியை நாம் ஒருபோதும் கைவிடக் கூடாது என்பதையும் காட்டியது.

ஜே. எஃப்., இங்கிலாந்து

நான் ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். கெட்ட சகவாசத்தின் காரணமாக போதைபொருள் பழக்கம் ஏற்பட்டது, வன்முறையில் ஈடுபட்டேன். 18 வயதில் எனக்கு 25 ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்தவ சபையில் நான் மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட போதிலும், நான் எதற்கும் பிரயோஜனமில்லாதவன் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருந்து வந்தது. ஆனால் இந்தக் கட்டுரையை வாசித்தப்பின், யெகோவா அவரை தேடுகிறவர்களுக்கு தூரமானவரல்ல என்பதை தெரிந்துகொண்டேன். நான் இன்னும் சிறையில் இருந்தாலும் இந்த அனுபவம் உறுதியாக நிற்பதற்கு என்னை ஊக்குவிக்கிறது.

ஆர். பி., ஐக்கிய மாகாணங்கள்

தேன்சிட்டுக்கள் “மலர்களை முத்தமிடும் குருவி” (ஆகஸ்ட் 8, 1999) கட்டுரை அற்புதம். தேன்சிட்டுக்களை நான் இதற்கு முன்னும் கவனித்திருக்கிறேன், ஆனால் இவை இத்தனை சிறியதாக இருக்குமென எனக்குத் தெரியவே தெரியாது. வார்த்தைகளும் படங்களும் இந்தக் கண்கவர் உயிரினங்களில் என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

ஆர். ஹெச்., ஜெர்மனி

இந்தத் தகவலும் அழகிய படங்களும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. கோடை காலத்தில் தேன்சிட்டுகள் அடிக்கடி என்னுடைய தோட்டத்துக்கு வந்துபோகும். அற்புதமான இந்தப் பறவைகளை பார்த்தாலே மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். பல தடவை அவற்றைப் பார்த்து நான் பரவசமடைந்திருக்கிறேன்.

சி. எஸ். எஸ்., பிரேஸில்

பத்திரமாக ஏணி ஏறுதல் “ஏணி ஏறுதல்—பாதுகாப்புக்கு சில டிப்ஸ்!” (ஆகஸ்ட் 8, 1999) கட்டுரைக்கு நன்றி. சமீபத்தில் நான் ஒரு ஏணியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். அதனால் முழங்காலில் ஒரு அறுவை சிகிச்சை எனக்கு நடந்தது. நீங்கள் கொடுத்திருக்கும் பத்து டிப்ஸ்களுக்கு நன்றி, அடுத்த முறை ஏணியை பயன்படுத்தும் போது நான் அதை மறக்கமாட்டேன்.

டி. என்., மெக்ஸிகோ

விண்வெளி நிலையம் எனக்கு 16 வயதாகிறது. விண்வெளி ஆய்வில் எப்போதுமே எனக்கு ஒரு மோகமுண்டு. ஆகவே “சர்வதேச விண்வெளி நிலையம்​—⁠மிதக்கும் ஆய்வுக்கூடம்” (ஆகஸ்ட் 22, 1999) கட்டுரைக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன். இதுபோன்ற கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.

கே. இ., ஐக்கிய மாகாணங்கள்

கண்டிக்கும் விதமாக ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் நீங்கள் இந்த விண்வெளி நிலையத்தை ஓஹோவென பாராட்டி இருக்கிறீர்கள். மனிதனுக்கு இப்படிப்பட்ட ஒரு திட்டம் வைத்திருப்பதாக கடவுள் ஒருபோதும் தெரிவிக்கவில்லையே. லட்சக்கணக்கானவர்கள் வறுமையில் வாடும்போது, ஒரு முறை ராக்கெட் செலுத்துவதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பது வெட்கக்கேடு. இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் புகழ்ந்து பேசுகையில் கடவுள்மீது உங்கள் அவநம்பிக்கையை காண்பிக்கிறீர்கள்.

பி. என். எம்., இங்கிலாந்து

கடவுள் “பூமியை மனுபுத்திரனுக்குக் கொடுத்தார்” என்பதாக பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 115:16) என்றாலும் கடவுளுடைய படைப்பில் மனிதன் அக்கறைக் காட்டுவது தவறல்ல. சொல்லப்போனால், கடவுளுடைய ஞானத்தையும் படைப்பு திறனையும் அறிந்துகொள்ள வானங்களை பார்க்கும்படி விசுவாசமுள்ள மனிதர்களை பைபிள் ஊக்குவிக்கிறது. (சங்கீதம் 8:3, 4; 19:1) திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்துக்கு மகிமையைக் கொடுப்பது எங்கள் நோக்கமல்ல. அதைக் கட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை நாங்கள் வெறுமேன வெளியிட்டோம். இத்தனை பெரிய தொகையை செலவுசெய்வது ஏற்றதுதான் என்பதை இந்த விண்வெளி நிலையம் செய்யப்போகும் ஆராய்ச்சிகள் காண்பிக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.​—⁠ED.

துன்புறுத்தலை சகித்து உயிரோடு “மரணப்பிடியிலும் கடவுளை சேவித்தல்” (ஆகஸ்ட் 22, 1999) கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். 17 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கோலாவிலுள்ள சகோதரர்கள் சகித்திருந்ததன் காரணமாக ஒரு சமயம் ஆவிக்குரிய விதத்தில் தரிசாக இருந்த தேசம் இன்று ஏராளமான விளைச்சலினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

ஆர். ஒய்., ஜப்பான்