Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறுவன் பீட்டருக்கு என்ன ஆச்சு?

சிறுவன் பீட்டருக்கு என்ன ஆச்சு?

சிறுவன் பீட்டருக்கு என்ன ஆச்சு?

ஈக்குவடாரிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஆகஸ்ட் 22, 1970, விழித்தெழு!-வில் “இரத்தமேற்றாமல் இருதய அறுவை சிகிச்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. 1963-⁠ல் வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு அறுவை சிகிச்சை பீட்டர் என்ற ஏழு வயது கனடா நாட்டு சிறுவனுக்குத் தேவைப்பட்ட சமயத்தில் நடந்த விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஒரு அறுவை சிகிச்சை செய்து பழுதாகியிருந்த பீட்டரின் இருதய வால்வை சரிசெய்துவிடலாம் என்பதாக பீட்டரின் மருத்துவர் சொன்னார். பீட்டரின் பெற்றோர் அவனை ஒரு மருத்துவ நிபுணரிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். இரத்தமில்லாமல் இந்த ஆபரேஷனை செய்ய முடியுமா என்பதாக பீட்டரின் பெற்றோர் அவரைக் கேட்டார்கள். மருத்துவர் சொன்னார்: “முடியாது. அது நிச்சயமாக முடியவே முடியாது. நான் விவரம் தெரிந்துதான் பேசுகிறேன்.”

பீட்டரின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. இரத்தமில்லாமல் ஆபரேஷன் செய்ய முன்வரும் சர்ஜன் எவராவது கிடைப்பாரா என்பதாக அவர்கள் தேடி தேடி, கடைசியாக ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். பிறகு என்னவானது? பீட்டருக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது, ஆனால் இது எவ்வளவு வெற்றியாக இருக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்பதாக பெற்றோரிடம் மருத்துவர் சொன்னார். ஆக சிறுவன் பீட்டருக்கு என்ன ஆச்சு?

பீட்டருக்கு 13 வயதானபோது அவனும் அவன் குடும்பமும் தென் அமெரிக்காவில், ஈக்குவடாருக்கு வந்துவிட்டார்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு தேவை அதிகம் இருந்தபடியால் அவர்கள் இங்கு வந்தார்கள். (மத்தேயு 24:14) பீட்டர் 15 வயதில் முழுக்காட்டுதல் எடுத்து 18 வயதில் ஒழுங்கான பயனியராக (முழுநேர சுவிசேஷகன்) ஆனான். 26 வயதில் அவன் விசேஷ பயனியராக ஆனான். இவன் ஊழியம் செய்த பிராந்தியம் எங்கிருந்தது தெரியுமா? ஆண்டிஸில் சமுத்திர மட்டத்துக்கு 3,000 மீட்டர் மேலே இருக்கும் ப்யூப்ளோவில். 1988-⁠ல் 31 வயதில் பீட்டர் மனைவி இஸபெல்லுடன் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரயாண ஊழியராக சேவிக்க ஆரம்பித்தார். இன்றும் அவர் அந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சபைகளை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆம், கூடுதலாக எந்த ஆபரேஷனும் செய்வதற்கு அவசியமில்லாமல் பீட்டர் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். நோயாளிகளின் உரிமைகளை மதிக்கும் திறமையுள்ள சர்ஜன்கள் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு அவரும் ஆயிரக்கணக்கான மற்ற சாட்சிகளும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர்!

[பக்கம் 23-ன் படம்]

சர்ஜரி முடிந்தவுடன் ஏழு வயது பீட்டர்

[பக்கம் 23-ன் படம்]

இன்று பீட்டரும் இஸபெல் ஜான்ஸ்டனும்