Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யுனிவர்சிட்டி பாடபுத்தகங்கள்கூட அவ்வளவு துல்லியமாக இல்லை”

“யுனிவர்சிட்டி பாடபுத்தகங்கள்கூட அவ்வளவு துல்லியமாக இல்லை”

“யுனிவர்சிட்டி பாடபுத்தகங்கள்கூட அவ்வளவு துல்லியமாக இல்லை”

உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைப் பற்றி ஒரு நபருடைய கணிப்பே இது. ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி இந்தப் புத்தகத்தை அவருக்கு கொடுத்தார். அன்றைக்கு சாயங்காலம் பின்வரும் செய்தியை தன்னுடைய டெலிபோன் ஆன்சரிங் மெஷினில் அந்த சாட்சி கேட்டார்:

“இன்னைக்கு காலையில் உங்களிடம் பேசினேன். நீங்கள் கொடுத்த “உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா?” புத்தகத்தில் பாதி வந்துவிட்டேன். அண்டத்தின் ஆரம்பத்தைப் பற்றி அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டதைப் பார்த்து மலைத்துப்போனேன், அப்-டு-டேட்டாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. நான் உங்களிடம் காண்பித்த புத்தகத்திலுள்ள விஷயம் . . . இதிலும் இருக்கிறது.

“உங்களுடைய புத்தகம் மிகத் துல்லியமாகவும் அப்-டு-டேட்டாகவும் இருக்கிறது. யுனிவர்சிட்டி பாடபுத்தகங்கள்கூட அவ்வளவு துல்லியமாக இல்லை. அடிப்படை நான்கு இயற்கை சக்திகளை—புவி ஈர்ப்பு, மின்காந்தப்புலம், பலமான அணு சக்தி, பலவீனமான அணு சக்தி ஆகியவற்றை​—⁠அது குறிப்பிடுகிறது. இதெல்லாம் நவீன கண்டுபிடிப்புகள், சூடான செய்திகள். அடுத்த வாரம் உங்களிடம் பேசுகிறேன். குட்-பை.”

192 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் உங்களுக்கும் வேண்டுமா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் நீங்கள் இப்புத்தகத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள உதவி செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறோம். தயவுசெய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள்.

□ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.

□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA