Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகளை போதிப்பதற்கு ஏற்ற பத்திரிகை

மனித உரிமைகளை போதிப்பதற்கு ஏற்ற பத்திரிகை

மனித உரிமைகளை போதிப்பதற்கு ஏற்ற பத்திரிகை

மனித உரிமைகளைப் பற்றி ஒரு கட்டுரை வரையும்படி, ஸ்பெய்னிலுள்ள கிரானடாவில் வசிக்கும் 17 வயது மாணவி ரட் ஹிமனத் ஹேலாவிடம் ஆசிரியர் கூறினார். இந்தக் கட்டுரை எழுதி பல வாரங்களுக்குப்பின், ஸ்பெய்னிலுள்ள மற்ற மாணவர்களோடு, அந்நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதற்கு இவளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பெல்ஜியம், ப்ருஸ்ஸெல்ஸில் இருக்கும் ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழு அறிவித்தது. அதன் பிறகு, பின்வரும் கடிதத்தை விழித்தெழு! பத்திரிகையை பிரசுரிப்போருக்கு அவள் எழுதினாள்.

“மனித உரிமைகள் சம்பந்தமான அப்-டு-டேட் தகவல்கள் எனக்குத் தேவைப்பட்டன. ‘எல்லாருக்கும் மனித உரிமைகள்—நிழல் நிஜமாகுமா?’ என்று தலைப்பிடப்பட்ட நவம்பர் 22, 1998, ‘விழித்தெழு!’ இதழ், நான் தேடிக்கொண்டிருந்த தகவலை தந்தது. மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை விளக்குவதற்கு, பெண்களின் எதிர்காலம், நாசி படுகொலை பற்றிய தகவல்களை வேறுசில ‘விழித்தெழு!’ இதழ்களிலிருந்து திரட்டினேன். [ஏப்ரல் 8, 1998; ஆகஸ்ட் 8, 1998 இதழ்களை காண்க.] மற்ற பத்திரிகைகளிலோ அல்லது ஆதரங்களிலோ நான் கண்டுபிடிக்க முடியாத தகவல்கள் ‘விழித்தெழு!’ பத்திரிகையில் இருந்ததை என்னுடைய ஆராய்ச்சியில் தெரிந்துகொண்டேன். புகைப்படங்களும் என் மனதை கவர்ந்தன, என்னுடைய அறிக்கையில் அவற்றில் சிலவற்றையும் சேர்த்துக்கொண்டேன்.

“என்னுடைய கட்டுரைக்கு பரிசு கிடைத்ததால், பின்லாந்தில் ஒரு வாரத்தை செலவழித்தேன். அதனால் மனித உரிமைகளைப் பற்றி கூடுதலாக பேசுவதற்கும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை சிறப்பித்துக் காட்டும் ‘விழித்தெழு!’ பத்திரிகையின் மதிப்பை விளக்குவதற்கும் முடிந்தது.

“உலக சம்பவங்களைப் பற்றி எங்களுக்கு முதலில் தெரிவிப்பதற்காக உங்களுக்கு கோடாகோடி நன்றி! இந்தத் தகவல்களிலிருந்து கோடிக்கணக்கானோர் தொடர்ந்து பயன்பெற யெகோவா உங்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.”

[பக்கம் -ன் படங்கள்15]

ரட்டும் அவளது சான்றிதழும்