Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எதார்த்தமான வழிகாட்டி”

“எதார்த்தமான வழிகாட்டி”

“எதார்த்தமான வழிகாட்டி”

கடந்த கோடையில் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பல புத்தகங்களை ஆர்கன்சாஸ் டெமோகிரட் காஸெட் என்ற செய்தித்தாள் விமர்சித்தது. அந்தப் புத்தகங்களில் ஒன்றைப் பற்றி இவ்வாறு கூறியது: “எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி, இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகம் குடும்பங்களுக்கு ஏற்ற எதார்த்தமான வழிகாட்டி. . . .

“இப்புத்தகம் ஒழுக்கநெறி மற்றும் உணர்ச்சி சம்பந்தமான அநேக நல் அறிவுரைகளை வாசகருக்கு வழங்குகிறது. உதாரணமாக, எல்லா இளைஞரும் பெற்றோருடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புவதை அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள், ஆனால் இளைஞருக்கு பின்வரும் புத்திமதிகளைத் தருகிறார்கள்:

‘உனக்கு அதிக சுதந்திரமும் பொறுப்பும் வேண்டுமா? அப்படியானால் உன்னைப் பொறுப்புணர்ச்சியுள்ளவனாக நிரூபி. உன் பெற்றோர் உனக்கு நியமிக்கும் வேலைகள் எதுவாயினும் அதை சீரியஸாக ஏற்றுச் செய்.’

“எப்பொழுதும் தனிப்பட்ட உத்தரவாதத்தைப் பற்றி பிரசங்கித்து, தங்களிடமும் பிறரிடமும் இளைஞர்கள் மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அடிக்கடி புத்திமதி கொடுக்கும் ஒரு புத்தகத்தை வெகுசில பெற்றோரே நிராகரிப்பர். இப்புத்தகம் தரும் புத்திமதிகளுக்கு எப்பொழுதும் பைபிள் ஆதாரத்தைக் கொடுக்கிறபோதிலும், பல சந்தர்ப்பங்களில் அவை நடைமுறையான ஞானத்தின் அடிப்படையிலானது. . . . முக்கியமாக சுயமரியாதையைப் பற்றிய பகுதி மனதைக் கவரத்தக்க ஒன்றாகும், ஏனெனில் கட்டுப்பாடற்ற சுய கெளரவமே பயனுள்ளது என்ற எண்ணத்தால் அநேக இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்.”

அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டிய பிறகு, அதைப் பற்றி அந்தக் கட்டுரை இவ்வாறு சொன்னது: “தற்பெருமை பூரிப்பு என்பது ஒருவகையான இறுமாப்பு, மனத்தாழ்மையே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலைக்கல் போன்றவை சாந்தமான நினைப்பூட்டுதல்கள். இன்றைய மீடியாக்கள் வழங்கும் மடத்தனமான ஆலோசனைகள், நல்லெண்ணமுள்ள நண்பர்களும் ஆலோசகர்களும் இளைஞர்மீது திணிக்கும் அறிவுரைகளுக்கு இப்படிப்பட்ட புத்திமதிகள் நல்ல மாற்று மருந்துகள்.”

இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்திலுள்ள தகவல்களிலிருந்து பயனடைய விரும்புகிறீர்களா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் நீங்கள் இப்புத்தகத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள உதவி செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறோம். தயவுசெய்து கீழுள்ள கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள்.

◻ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.

◻ தயவுசெய்து எனக்கு இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுங்கள்.