எய்ட்ஸ் ஆப்பிரிக்காவில்—புதிய ஆயிரத்தாண்டில் என்ன நம்பிக்கை?
எய்ட்ஸ் ஆப்பிரிக்காவில்—புதிய ஆயிரத்தாண்டில் என்ன நம்பிக்கை?
ஜாம்பியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல பிரதிநிதிகள், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் மற்றும் எஸ்டிடி பற்றிய சர்வதேச மாநாட்டிற்காக ஜாம்பியாவிலுள்ள லுஸாகாவில் கூடிவந்தனர். ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவுவதை தவிர்க்க ஆப்பிரிக்க நாடுகளுக்கு மத்தியில் இன்னும் அதிகமான ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்துவதும் இந்த மாநாட்டின் ஒரு நோக்கமாகும்.
அப்போது ஜாம்பியாவில் சுகாதார அமைச்சராக இருந்த பேராசிரியர் கண்டூ லூ, ஆப்பிரிக்காவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் நிலைமை “மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறினார். “இது, சுகாதார, சமூக, பொருளாதார துறைகளில் ஏற்படும் அநேக முன்னேற்றங்களை தடை செய்கிறது, சில சமயங்களில் அவற்றை தலைகீழாகவும் மாற்றிவிடுகிறது” என்றும் அவர் கூறினார்.
இரத்தமேற்றுதல் மூலமாகத்தான் எய்ட்ஸ் பரவுகிறது என்பதை இரத்த பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு ஒன்று ஒப்புக்கொண்டது. நோயுள்ள ஒரு நபரோடு உடலுறவு கொள்வதால் ஹெச்ஐவி எப்போதுமே தொற்றுவதில்லை, ஆனால் எய்ட்ஸ் உள்ள இரத்தத்தைப் பெறுபவர் நிச்சயம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவார், தப்பிக்கவே வழியில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் இரத்த பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒரு டாக்டர் கூறினார். விஷயம் இப்படி இருப்பதால் “இரத்தமேற்றாமல் இருப்பதே மிகவும் பாதுகாப்பானது” என அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
சிகிச்சைக்கு ஆகும் ஏராளமான செலவின் காரணமாகவே எய்ட்ஸ் உள்ளவர்கள் மருத்துவ உதவி பெறுவது கடினமாகிறது, அநேக சமயங்களில் முடியாமலே போகிறது என்று அந்தக் கருத்தரங்கு வலியுறுத்தியது. உதாரணமாக, உகாந்தாவின் நகர்புறத்தில் வசிக்கும் ஒருவர் மாதத்திற்கு சுமார் 200 டாலர் சம்பாதிக்கிறார். ஆனால், ஆன்டிரிட்ரோவைரல்களை (antiretrovirals) உபயோகித்து செய்யும் சிகிச்சைக்கு ஒரு மாதத்தில் 1,000 டாலர் செலவாகலாம்!
புதிய ஆயிரத்தாண்டு ஆரம்பித்தும் எய்ட்ஸ் பரவுவதை தடுப்பதற்கு எந்த எளிய தீர்வும் கிடைக்கவில்லை என லுஸாகா மாநாடு காண்பிக்கிறது. ஆனால், எல்லா வியாதிகளுக்கும் ஒரே நிவாரணம் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனிடமே உள்ளது என பைபிளை நம்புவோர் அறிந்திருக்கின்றனர். அவருடைய புதிய உலகில், “‘வியாதியாய் இருக்கிறேன்’ என அதில் வசிக்கும் ஒருவரும் சொல்லமாட்டார்கள்” என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—ஏசாயா 33:24, NW.
[பக்கம் -ன் தேசப்படம்/படங்கள்31]
பேராசிரியர் கண்டூ லூ
[படத்திற்கான நன்றி]
புகைப்படம்: E. Mwanaleza, டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா அனுமதியுடன்