Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்ணி வெடிகளே—இல்லா உலகம்

கண்ணி வெடிகளே—இல்லா உலகம்

கண்ணி வெடிகளே—இல்லா உலகம்

கண்ணி வெடிகள் என்ற கண்ணியை யாரால் அகற்ற முடியும்? வெறுப்பு, சுயநலம், பேராசை போன்றவற்றை வேரோடு பிடுங்கிப்போட மனிதர்களால் முடியாது என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். ஆனால் பைபிளை நம்புவோர், சிருஷ்டிகரால் நிரந்தரமான ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதை அவர் எப்படி செய்வார்?

சமாதானமான சமுதாயத்தை உருவாக்குதல்

யுத்தம் செய்வது மனிதர்கள்தானே, ஆயுதங்கள் தானாகவே யுத்தம் செய்கின்றனவா என்ன? ஆகவே, உண்மையான சமாதானம் நிலவ மனிதர்கள் மத்தியில் ஜாதி, இனம், தேசம் என்ற பிரிவினைகளை உண்டாக்கும் வெறுப்பு முதலாவது நீங்க வேண்டும். கடவுள் தம்முடைய ராஜ்யத்தின் மூலம் இதையே செய்யப்போவதாக வாக்குறுதி அளிக்கிறார். உலக முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அந்த ராஜ்யத்திற்காகவே ஜெபம் செய்கிறார்கள்.—மத்தேயு 6:9, 10.

பைபிள் யெகோவாவை, “சமாதானத்தின் தேவன்” என்று அழைக்கிறது. (ரோமர் 15:33) ஆனால், கடவுள் கொடுக்கும் இந்தச் சமாதானம் தடைகளிலோ, ஒப்பந்தங்களிலோ, வல்லமைமிக்க எதிரி தேசம் தாக்கிவிடும் என்ற பயத்திலோ சார்ந்தில்லை. மாறாக, கடவுள் கொண்டுவரும் சமாதானம் மனிதர்கள் சிந்திக்கும் விதத்திலும், மற்ற மனிதர்களை நோக்கும் விதத்திலும் மாற்றங்கள் செய்வதை உட்படுத்துகிறது.

மனத்தாழ்மை உள்ளவர்களுக்கு யெகோவா தேவன் தம்முடைய சமாதான வழிகளைப் போதிப்பார். (சங்கீதம் 25:9) உயிரோடிருக்கும் அனைவரும் “கர்த்தரால் [“யெகோவாவால்,” NW] போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்” காலம் வருகிறது என அவருடைய வார்த்தையாகிய பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (ஏசாயா 54:13) இது இன்றே ஓரளவிற்கு நிறைவேறி வருகிறது. யெகோவாவின் சாட்சிகள் உலக முழுவதிலும் பல வித்தியாசப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டி உள்ளனர்; இது அனைவரும் அறிந்ததே. பைபிளிலுள்ள உன்னதமான நியமங்களைக் கற்றுக்கொள்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ கடுமையாக முயற்சி செய்கின்றனர். இந்த நியமங்களைக் கற்றுக்கொள்ளாதவர்கள் பிளவுபட்டிருக்கிற போதிலும் கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். பைபிள் கல்வி அவர்களுடைய நோக்குநிலையை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. முன்பு வெறுக்க கற்றுக்கொண்டவர்கள் இப்போது அன்புகூர கற்றுக்கொள்கிறார்கள்.—யோவான் 13:34, 35; 1 கொரிந்தியர் 13:4-8.

போராயுதங்களை ஒழித்துக்கட்டுவதில் கல்வியோடுகூட உலகளாவிய ஒத்துழைப்பும் அவசியம் என பல காலங்களாகவே சொல்லி வந்தனர். உதாரணமாக, ஒரு சர்வதேச சமுதாயம் தேவை என செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி பரிந்துரை செய்கிறது. இந்தச் சர்வதேச சமுதாயம், தடைகள் மூலமாகவும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும் கண்ணி வெடிகள் பற்றிய பயத்தை மேற்கொள்ள ஒற்றுமையாக செயல்படும்.

இதையும்விட அதிகத்தை செய்யப்போவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது [தற்போதிருக்கும்] அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.

மனிதனால் செய்ய முடியாததை கடவுளுடைய ராஜ்யம் செய்து முடிக்கும். உதாரணமாக, சங்கீதம் 46:9 முன்னுரைப்பதாவது: “அவர் [யெகோவா] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” மனிதன் தன் சிருஷ்டிகரோடும் சக மனிதர்களோடும் உண்மையான சமாதானத்தை அனுபவித்து மகிழும் ஒரு சூழ்நிலையை கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரும்.—ஏசாயா 2:4; செப்பனியா 3:9; வெளிப்படுத்துதல் 21:3, 4; 22:2.

முந்தைய கட்டுரையின் ஆரம்பத்தில் அகஸ்டோவைப் பற்றி வாசித்தோம் அல்லவா? பைபிளிலுள்ள இந்தச் செய்தியே அவனுக்கு ஆறுதல் அளிக்கிறது. அவனுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகள். பைபிளில் காணப்படும் மகத்தான இந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்க அவர்கள் அவனுக்கு உதவுகின்றனர். (மாற்கு 3:1-5) கண்ணி வெடி விபத்தினால் முடமான அவனுக்கு தற்போதைய வாழ்வு வேதனையாகத்தான் இருக்கும். ஆனால், கடவுளுடைய வாக்குறுதியின்படியே இந்தப் பூமி பூங்காவனமாக மாறும் நாளை அவன் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறான். “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்ப[டும்], . . . முடவன் மானைப்போல் குதிப்பான்.”—ஏசாயா 35:5, 6.

அந்தப் பரதீஸ் வரும்போது கண்ணி வெடிகள் பற்றிய பயமே இருக்காது. மாறாக, பூமியின் எல்லா பகுதிகளிலும் மக்கள் சமாதானத்தோடு வாழ்வார்கள். அந்தச் சூழ்நிலையை மீகா தீர்க்கதரிசி இவ்வாறு விவரித்தார்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”—மீகா 4:4.

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள அவருடைய வாக்குறுதிகளைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ளுங்கள். அல்லது இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் பொருத்தமான ஒன்றிற்கு எழுதுங்கள்.

[பக்கம் 8, 9-ன் படம்]

கடவுளுடைய ராஜ்யத்தில் கண்ணி வெடிகள் பற்றிய பயமே இருக்காது