Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஞானமாக டெலிவிஷனை பயன்படுத்த இதோ சில டிப்ஸ்!

ஞானமாக டெலிவிஷனை பயன்படுத்த இதோ சில டிப்ஸ்!

ஞானமாக டெலிவிஷனை பயன்படுத்த இதோ சில டிப்ஸ்!

ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த செய்தித்துறை கண்காணிப்புக் குழு தொகுத்த பொது மக்களின் நலனில் அக்கறையற்ற அமெரிக்க உள்ளூர் டிவி செய்திகள் என்ற அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: டெலிவிஷன், “கதை கூறுபவராகவும், குழந்தையை கவனிப்பவராகவும், பொது கருத்துக்களுக்கேற்ப மாற்றியமைப்பவராயும்” செயல்படுகிறது. “எங்கும் டிவி மயம் . . . சிகரெட் புகை காற்றில் கலந்து காணப்படுவது போலவே இதுவும் இருக்கிறது.” சிகரெட் புகையை சுவாசிப்பது எந்தளவுக்கு தீங்கானதோ அந்தளவுக்கு எல்லா டிவி புரோகிராம்களையும் நல்லது கெட்டது என்றில்லாமல் மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருப்பதும் தீங்கை விளைவிக்கிறது—அதுவும் குறிப்பாக பிள்ளைகளுக்கு.

டிவியில் பார்க்கும் குற்றச்செயலையும் வன்முறையையும் குறித்து அதே அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “வன்முறை காட்சிகளையும், படங்களையும் காண்பது பிள்ளைகளின் கற்றுக்கொள்ளும் திறமையையும் இரக்க குணத்தையும் பாதித்து, கோபாவேசத்தைத் தூண்டுகிறது என்பதாக நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன.” 1992-ல் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் இவ்வாறு குறிப்பிட்டது: “டெலிவிஷனில் காட்டப்படும் வன்முறையே இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு முக்கிய காரணி.”

மோசமான டிவி புரோகிராம்கள் உங்கள் பிள்ளைகளை பாதிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? டெலிவிஷனை ஞானமாக பயன்படுத்துவது எப்படி என்பதை அநேக பொது சுகாதார அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன. அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சில டிப்ஸ்களை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. அவற்றில் சில இதோ.

◼ எப்போது பார்க்கலாம் எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை திட்டமிடுங்கள். பிள்ளைகள் எப்போது பார்க்கலாம் என்பதற்கு வரையறை வையுங்கள். டிவி செட்டை பிள்ளையின் அறையில் வைக்காதீர்கள்.

◼ டிவிக்கு அருகில் பூமி கோளத்தை வைக்கவும். டிவி புரோகிராம்களில் வரும் இடங்கள் எங்கு இருக்கின்றன என்பதைக் காண அது அவர்களுக்கு உதவும்.

◼ பிள்ளைகளோடு சேர்ந்து டிவி பார்ப்பதன்மூலம் நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்களுக்கு விளக்க முடியும். பத்து வயதிற்குக்கீழ் உள்ள பிள்ளைகளால் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாது.

◼ டிவி செட்டை எல்லாரும் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்காதீர்கள். டிவி செட்டை காபினெட்டுக்குள் வைத்து பூட்டி வையுங்கள். இப்படிச் செய்வதால் நினைத்த நேரத்தில் டிவியை ‘ஆன்’ செய்வதற்கோ சேனலை மாற்றுவதற்கோ வாய்ப்பு இருக்காது.