Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தொலைந்தது—கிடைத்தது

தொலைந்தது—கிடைத்தது

தொலைந்தது—கிடைத்தது

கடந்த வருடம், அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் ஒருவருக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கொடுத்தபோது, அவர் வேண்டாம் என்று பவ்வியமாக கூறினார். ஆனால் அவருடைய சின்ன மகள் ஆசைப்பட்டதும் அவற்றை வாங்கிக்கொண்டார். அப்பாவும் மகளும் காரை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். குப்பைகளை பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் கொட்டிக்கொண்டிருந்தார்கள். விருப்பம் இல்லாமல் பத்திரிகைகளை பெற்றுக்கொண்டதால் குப்பையில் எறிந்துவிடுவார்களோ என்ற கவலை பத்திரிகைகளை கொடுத்துவிட்டு வந்த யெகோவாவின் சாட்சிக்கு வந்தது. ஆகவே அவர் கொஞ்ச நேரத்துக்குப் பின்னர் திரும்பி வந்து குப்பைத் தொட்டியில் பத்திரிகைகளை தேட ஆரம்பித்தார்.

பத்திரிகைகள் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு கைப்பையும், மணிபர்ஸும் கிடைத்தன. பர்ஸில் ஒரு பெண்ணின் விலாசம் இருந்தது. உடனே இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அந்த விலாசத்தைத்தேடி போனார்கள். போன இடத்தில், நடுத்தர வயது பெண் ஒருவர் தன்னோட குதிரையைக் கூட்டிக்கொண்டு லாயத்திற்கு சென்றுகொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகள் கண்டெடுத்த பொருட்களை கொடுத்ததும் அந்தப் பெண்ணிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லறதுனே தெரியல. எல்லாமே முக்கிய பேப்பர்ஸ். என்னோட பாஸ்போர்ட், செக்புக், கிரெடிட் கார்டு, குதிரையின் டாக்குமென்ட்ஸ், எல்லாமே இதுலே இருக்கு” என்றார். அந்தப் பொருட்கள் முந்தைய நாள் இரவு திருட்டுப்போனதாக கூறினார். நல்லவேளை, குப்பைத் தொட்டியை காலி செய்யும் முன் தேடியதால் இவை கிடைத்தன.

கைப்பையையும் மணிபர்ஸையும் கொண்டுவந்து கொடுத்த தம்பதிக்கு அந்த அம்மா வெகுமானம் கொடுக்க முன்வந்தார். அவர்கள் அதை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை அந்த அம்மாவுக்கு கொடுத்தார்கள். ஆனாலும், தன் நன்றியை காட்ட விரும்பிய அந்த அம்மா, இதுபோன்ற பைபிள் பிரசுரங்கள் உலகெங்கும் வினியோகிக்க உதவியாக ஒரு செக் எழுதிக்கொடுத்தார். அன்று முதல் அந்த அம்மா பைபிளை ஆர்வமாக படித்து வருகிறார்.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேட்டைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை நிரப்பி, அதில் உள்ள விலாசத்திற்கோ பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி வையுங்கள்.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவலை எனக்கு அனுப்பி வைக்கவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.