“விஷயங்களை சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“விஷயங்களை சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
இப்படித்தான் விழித்தெழு! பத்திரிகையைப் பற்றிய தன்னுடைய அபிப்பிராயத்தை தெரிவித்தார் ஓர் இளைஞர். இவர் மெக்ஸிகோவில் யுகாட்டன் என்ற இடத்தில் வணிக நிர்வாக உதவியாளராக பணிபுரிகிறார். இவருடைய சக ஊழியர் ஒரு யெகோவாவின் சாட்சி, அவரே விழித்தெழு! பத்திரிகையை கொடுத்தார். இவர்கள் இருவரும் இன்ஸுரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர்கள்.
விழித்தெழு! பத்திரிகையை பற்றி அந்த இளைஞர் இவ்வாறு தெரிவித்தார்: “அது உண்மையிலேயே ஓர் அறிவுக் களஞ்சியம், உண்மைகளையே பேசுகிறது. அதோடு, அரசியலில் மூக்கை நுழைக்காமல், சிலரை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் பேசாமல் அது விஷயங்களை சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்தப் பத்திரிகையைப் படித்ததால் பிரச்சினைகளுக்குப் பரிகாரத்தை கண்டுகொண்டேன். இது உண்மையிலேயே மனதைக் கவரும் பத்திரிகை, நடுநிலையான பத்திரிகை. புதுப்புது தகவல் நிறைந்த பத்திரிகை. இதற்காக உங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி!”
அன்பானவர்களை மரணத்தில் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் குறிப்புகளை சில வருடங்களுக்கு முன்பு விழித்தெழு! பிரசுரித்தது. அதில் வெளிவந்த விவரங்கள், நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டில் பிற்பாடு பிரசுரிக்கப்பட்டது. நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இந்த 32-பக்க சிற்றேட்டைப் படித்து ஆறுதல் அடையலாம். கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து கூப்பனிலுள்ள முகவரிக்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான முகவரிக்கோ அனுப்பினால் கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
◻ நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவலை எனக்கு அனுப்பி வைக்கவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.