Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளைகள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா?

உங்கள் பிள்ளைகள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா?

உங்கள் பிள்ளைகள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா?

பிள்ளைகள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமானால் ஒழுக்கம் மிக முக்கியம். ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள கண்டிப்பு அவசியம். “பிள்ளைகளிடம் பெற்றோர் தாராளமாக அன்புகாட்ட வேண்டும், அதேசமயத்தில் தேவையானபோது கண்டிக்க தவறக்கூடாது. அப்படிச் செய்யும்போது பிள்ளைகள் சுயமரியாதையையும் தன்னடக்கத்தையும் வளர்த்துக்கொள்வர்” என்று கனடா, மான்ட்ரீலின் செய்தித்தாள் த கஸட் சொல்கிறது. இதற்கு என்ன தேவை? பிள்ளைகளுக்கு வரம்புகள் தேவை, அதாவது எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள பெற்றோர் சில வரம்புகளை வைக்க வேண்டும் என்கிறார் மான்ட்ரீலைச் சேர்ந்த மனோதத்துவ ஆராய்ச்சியாளர் கான்ஸ்டான்ஸ் லேலெனெக்.

“பிள்ளைகள் ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டால், அதன் பலனை அந்த பிள்ளையே அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு மாறாக, பிள்ளையை அதிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும்போது அந்த பிள்ளை ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளாதபடி தடுத்துவிடுகிறோம்” என்றும் அறிவுறுத்துகிறார் லேலெனெக். இவர் பிள்ளைகள் மற்றும் பெற்றோரைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். பிள்ளைகளை கண்டிக்காமல் விட்டுவிடுவது, அவர்களுடைய வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கலாம்.

பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் பைபிளின் அறிவுரை மிகச் சிறந்தது. அது அநேக நூற்றாண்டுகளாக பயனுள்ளவையாக திகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று இவ்வாறு சொல்கிறது: ‘நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள்.’ (மத்தேயு 5:37, பொ.மொ.) எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என உங்கள் பிள்ளைகள் தெளிவாக புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்குங்கள். பிறகு, அவற்றை எப்போதும் நினைப்பூட்டி, தொடர்ந்து பின்பற்ற உதவுங்கள். தேவைப்படும் சமயங்களில் சரியான நடவடிக்கை எடுத்து நீங்கள் சொன்னதை ஆதரியுங்கள். உங்கள் சட்டதிட்டங்களையும், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுங்கள். அத்துடன் ‘எதை விதைக்கிறார்களோ அதையே அறுப்பார்கள்’ என்பதை உணர்த்துங்கள். (கலாத்தியர் 6:7; ரோமர் 2:6) இவ்வாறு அன்பாக கண்டிக்க வேண்டியதன் நோக்கம் என்ன? பிள்ளைகள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்; ஒழுக்கமான, பொறுப்புள்ள நபர்களாக வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம். அப்படி வாழ்வதற்கு தேவையான குணங்களை அவர்கள் இப்போதே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். உதாரணத்திற்கு, அவர்கள் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதற்கும், ஏமாற்றங்களை எதிர்ப்படும்போது அல்லது உடனடியாக பலன்கள் கிடைக்காதபோது அவற்றை சமாளிக்கவும் கற்றுக்கொள்ளவே இந்த கண்டிப்புகள்.

பிள்ளைகளை அன்பாக கண்டிப்பதைப் பற்றி கடவுள் பெற்றோருக்கு என்ன சொல்கிறார் என்ற கூடுதலான விஷயம் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. 192 பக்கமுள்ள இப்புத்தகத்தைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை நிரப்பி, அதில் உள்ள விலாசத்திற்கோ பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள்.

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை எனக்கு அனுப்புங்கள்.

மொழி .

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.