Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்”

“அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்”

“அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்”

இப்படித்தான் யெகோவாவின் சாட்சிகளுடைய பத்திரிகைகளுக்கும் அவற்றை கொண்டுவந்து கொடுத்தவர்களுக்கும் அமெரிக்காவிலுள்ள அலபாமாவைச் சேர்ந்த கத்தோலிக்கர் ஒருவர் எழுதினார்.

“காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் எழுத்து நடையும் அவற்றிலுள்ள விஷயங்களும் பிரமாதம். . . . உங்களுடைய ஆட்கள் இவற்றை கொண்டுவந்து கொடுக்கும்போது எனக்கு எப்போதும் ஒரே சந்தோஷம். அவை இரண்டையுமே நான் வாசிக்கிறேன்.

“உங்களுடைய ஆட்கள் மிகவும் நல்லவர்கள், பண்போடு நடந்துகொள்பவர்கள். புன்சிரிப்போடு கடவுளுடைய (யெகோவாவுடைய) வேலையை செய்கிற ஆட்களைப் பார்க்கும்போது எனக்கு அதிக மகிழ்ச்சி. போன தடவை இரண்டு குட்டிப் பிள்ளைகள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தப் பத்திரிகைகளைக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி சொன்னேன், சிறு பிள்ளைகள் தொல்லை கொடுக்காமல் இப்படி நல்ல காரியம் செய்வது எனக்கு உண்மையிலேயே அதிக சந்தோஷத்தை அளிக்கிறது.

“நான் கத்தோலிக்க மதத்தில் அதிக ஈடுபாடுள்ளவன் . . . , இருந்தாலும் உங்களுடைய அமைப்பும் உங்களுடைய ஆட்களும் செய்கிற இந்த மாபெரும் வேலையை மெச்சுகிறேன். என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன், நான் நிஜமாகவே உங்களுடைய பத்திரிகைகளை ரசித்துப் படிக்கிறேன், சிரித்த முகத்தோடு இருக்கும் உங்களுடைய ஆட்களை பாராட்டுகிறேன். நல்மனமுள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். இந்த நல்ல வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.”

பிரசுரங்கள் வேண்டுமென்று எங்களுக்கு கேட்டு எழுதுபவர்களுக்கு அவற்றை நாங்கள் அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய பிரசுரங்களில் ஒன்றுதான் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்பதாகும். அதிலுள்ள 16 பாடங்களில், பைபிளின் அடிப்படை விஷயங்களையும் கடவுளைப் பிரியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு கூடுதலான தகவல் வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள விலாசத்திற்கோ அனுப்புங்கள்.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவல் அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.