Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நீங்கள் என்னுடைய வாழ்க்கையை எழுதினீர்கள்!’

‘நீங்கள் என்னுடைய வாழ்க்கையை எழுதினீர்கள்!’

‘நீங்கள் என்னுடைய வாழ்க்கையை எழுதினீர்கள்!’

பல்வேறு வியாதிகளைப் பற்றிய கட்டுரைகள் பலவற்றை விழித்தெழு! பத்திரிகை கடந்த ஆண்டுகளில் பிரசுரித்திருக்கிறது. இருந்தாலும், விழித்தெழு! மருத்துவ பத்திரிகை அல்ல, ஆகவே இதுதான் சிறந்த பரிகாரம் என்றோ அது நல்லதல்ல என்றோ எழுதுவதில்லை. ஆனால், ஒரு வியாதியைப் பற்றி எழுதும்போது, அந்த வியாதிக்குரிய பிரச்சினைகளையும் காரணங்களையும் அலசுகிறது. மேலும், பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களை கவனிப்போருக்கும் பைபிள் தரும் நடைமுறையான ஆலோசனையை வழங்குகிறது.

உதாரணமாக, “ஃபைப்ரோமையால்கியாவை புரிந்துகொண்டு வாழுதல்” என்ற கட்டுரை ஜூன் 8, 1998 இதழில் வெளிவந்தது. அது, அகிலம் முழுவதிலும் உள்ள வாசகர்கள் அநேகரை கவர்ந்தது. சொல்லப்போனால், அந்தக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டு அநேக மாதங்களுக்குப் பிறகும் பாராட்டு கடிதங்கள் வந்தன. “மலைபோல இருந்த ஒரு பெரிய பாரம் என்னைவிட்டு தூக்கி எறியப்பட்டதைப் போல உணருகிறேன்” என்று எழுதினார் ஒரு பெண்மணி. “நீங்கள் என்னுடைய வாழ்க்கையை எழுதியதைப் போல் இருந்தது!” என எழுதினார் மற்றொரு பெண்மணி. “இப்பொழுது அந்த நோயை எப்படி சமாளிப்பது என்பதை அறிந்திருக்கிறேன்” என்றும் இவர் எழுதினார்.

தொழில்முறை வல்லுநர்களும் இந்தக் கட்டுரைக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஆர்த்ரைட்டிஸ் பௌன்டேஷனை சேர்ந்த சீனியர் வைஸ் பிரஸிடென்ட் இவ்வாறு எழுதினார்: “ஃபைப்ரோமையால்கியாவை பற்றிய இந்தக் கட்டுரை சமநிலையோடு, அதேசமயத்தில் முழுமையாக எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரை. பைபிள் மேற்கோள்களையும், இதுபோன்ற சூழ்நிலைமையிலும் மற்றெல்லா மருத்துவ சூழ்நிலைமைகளிலும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி எழுதியதற்காகவும் உங்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.”

அநேக கடிதங்கள் வாசகரிடமிருந்து வந்தன. அப்படிப்பட்ட கடிதங்களில் சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

“கிடைக்கும் எல்லா புத்தகங்களிலிருந்தும் இந்த விஷயத்தைப் பற்றி படித்து தெரிந்துகொள்ளும்படி என்னுடைய டாக்டர் என்னை உற்சாகப்படுத்தினார். நான் வாசித்ததிலேயே உங்களுடைய கட்டுரைதான் மிகச் சிறந்த கட்டுரை.”​—⁠எல். ஆர்.

‘என்னுடைய வியாதியைப் பற்றி அநேகர் என்னிடம் கேட்டார்கள். பொதுவாக அவர்களுக்கு ஒரு துண்டுப்பிரதி கொடுப்பேன். இப்பொழுது, விழித்தெழு! பத்திரிகையை படிக்கும்படி சொல்கிறேன். இதைப் போல வேறு எதுவுமே ஆறுதலளிக்க வில்லை!’​—⁠கே. கே.

‘நான் வாழ்க்கையில் தோற்கவில்லை, யெகோவா என்னை இன்னும் மதிப்போடு கருதுகிறார் என்ற உறுதியை இந்தக் கட்டுரை தந்தது.’​—⁠டி. சி.

“முதல் தடவையாக, என்னுடைய வேதனைகளை மற்றவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது போல உணர்ந்தேன்.”​—⁠சி. எச்.

“அவதிப்படுவது நாங்கள் மட்டும் அல்ல என்பதை அறிவது ஆறுதலாக இருந்தது.”​—⁠சி. ஏ.

‘நான் வழக்கமாக செய்துவந்ததை இனிமேல் செய்ய முடியாது என அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். எனக்கு உற்சாகம் தேவைப்படும்போது திரும்பத் திரும்ப எடுத்துப் படிப்பதற்காக இந்தக் கட்டுரையை என்னுடைய படுக்கை அருகிலேயே வைத்துக்கொள்வேன்.’​—⁠கே. பி.

‘இதுவரை, என்னால் முடிந்தளவுக்கு வேலை செய்தேன். அதேசமயத்தில், முடிந்தளவுக்கு இந்த நோயால் ஏற்படும் வேதனையையும் கண்டுகொள்ளாமல் இருந்தேன். பிறகு அப்படியே சோர்ந்துவிட்டேன். நீங்கள் காட்டும் வழி எனக்கு பேருதவியாக இருக்கிறது.’​—⁠எம். சி.

“எனக்கு 14 வயது. “எனக்கு ஃபைப்ரோமையால்கியா என்ற வியாதி இருப்பது 12 வயதாயிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. யெகோவா நம்மை கவனித்துக்கொள்கிறார் என்பதை அறிந்துகொண்டபோது என்னுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. இதுபோன்ற ஊக்கமூட்டும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள்.”​—⁠கே. ஏ. எம்.