Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நீங்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள்’

‘நீங்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள்’

‘நீங்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள்’

யெகோவாவின் சாட்சிகளுடைய யுகோஸ்லாவியா கிளை அலுவலகத்துக்கு வந்த பாராட்டு கடிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகளே இவை. பல நூற்றாண்டுகளாக இன வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் அந்த நாட்டிலிருந்து வந்த கடிதத்திலிருந்து:

“அன்புடையீர்,

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என்னுடைய சொந்த ஊரில், அதாவது சரஜெவோவில் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ஜெர்மனியில் நடந்த மாநாட்டிற்கு செல்லும்வரை உங்களுடைய நம்பிக்கைகளில் எனக்கு சிறிதும் ஆர்வம் இருந்ததில்லை. அங்கே க்ரோயேஷீயா, யுகோஸ்லாவியா மற்றும் பாஸ்னியா நாட்டு மக்கள் சமாதானத்தோடு ஒன்றாக அமர்ந்திருந்ததும், ஒருவரையொருவர் சகோதரர் சகோதரி என்று அன்புடன் அழைத்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற ஒன்றை நான் ஒருபோதும் கண்டதில்லை. இந்த உலக அரசியல் உங்களை எதுவும் செய்ய முடியாது என்பதை உங்களுடைய பரஸ்பர அன்பு துல்லியமாக நிரூபித்துவிட்டது. அனைவரிடமும் நீங்கள் காட்டிவரும் இந்த பரஸ்பர அன்புக்கு கடவுள் உங்களை என்றும் ஆசீர்வதிக்கட்டும்.”

பல்லாண்டுகளாக பகை எனும் தீ கொழுந்துவிட்டெரியும் தேசங்களிலிருந்து இதே போன்ற அறிக்கைகள் வருகின்றன. அங்கே வாழும் அநேகருடைய மனதில் எழும் கேள்வி: போரில்லாத உலகம் வருமா? இதையே தலைப்பாக கொண்ட 32-பக்க ஆங்கில சிற்றேடு, அப்படிப்பட்ட உலகம் வரும் என்பதற்கு வலிமைமிக்க அத்தாட்சியை அளிக்கிறது. ஆனால் எப்படி? எப்போது?

இந்த சிற்றேட்டின் சம்பந்தமாக நீங்கள் கூடுதலான தகவல் பெற விரும்பினால், இதே பத்திரிகையில் பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதவும்.

போரில்லாத உலகம் வருமா? என்ற சிற்றேட்டை அனுப்பி வைக்கவும்.

□இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.