அனைவருக்கும் “காலத்திற்கேற்ற அறிவுரை”
அனைவருக்கும் “காலத்திற்கேற்ற அறிவுரை”
“‘எவ்வளவு அருமையான ஆலோசனை!’ காலத்திற்கேற்ற அறிவுரையை அதில் வாசித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது” என்பதாக குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை வாசித்த ஒரு பெண்மணி எழுதினார். “ஒரு குடும்பத்தில் எழும்பும் ஒவ்வொரு சூழ்நிலையையும் (நியமங்கள் அடிப்படையில்) அலசிய விதமும், மற்றவர்களின் உணர்ச்சிகளை நன்கு புரிந்துகொண்டு விளக்கிய விதமும் என் மனதை தொட்டது. என்னை உணர்ச்சியில் ஆழ்த்தியது. . . . 8-வது அதிகாரத்தின் பாதியில் வாசிப்பதை நிறுத்திவிட்டு எழுதுகிறேன். இதற்கு மேலும் உங்களுக்கு எழுதுவதை என்னால் தள்ளிப்போட முடியவில்லை.”
அ.ஐ.மா.-விலுள்ள வட கரோலினாவைச் சேர்ந்த இந்த வாசகர் மேலுமாக இவ்வாறு எழுதினார்: “என் குடும்பத்தாரும் உலகெங்கிலுமுள்ள மற்றும் பலரும், இந்த புத்தகத்திலுள்ள விஷயங்களுக்கு மிகவும் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.”
இந்த 192-பக்க பிரசுரத்தால் உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பயனடைந்திருக்கின்றனர். குடும்பத்திலுள்ள அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும்—கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், தாத்தாபாட்டிமார் ஆகிய அனைவருக்கும்—இந்த புத்தகத்தில் நல்ல ஆலோசனை உள்ளது. “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்” ஆகியவை புத்திமதி கொடுக்கும் அதிகாரங்களில் சில.
உங்கள் சொந்த பிரதியைப் பெற, கீழ்க்காணும் கூப்பனை பூர்த்தி செய்து அதிலுள்ள விலாசத்திற்கோ பக்கம் 5-லுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு, படைப்பாளர் விரும்பிய விதமாகவே உங்கள் குடும்ப வாழ்க்கையை இன்பகரமாக்க திட்டவட்டமான ஆலோசனைகளைப் பெறுவீர்கள்.
(g01 1/22)
□ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.