Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

வாசா “வாசா​—⁠அன்று கடலுக்கு விருந்து இன்று கண்ணுக்கு விருந்து” (ஏப்ரல் 8, 2000) என்ற கட்டுரைக்கு என் பாராட்டுகள். வரலாற்றாசிரியனாகிய நான் இதைக் குறித்து அநேக ஆராய்ச்சிகளை செய்திருக்கிறேன். இந்தக் கட்டுரை, மிக நுட்பமாக நன்கு ஆராயப்பட்ட விவரங்கள் கொண்டது என நான் உறுதிகூற முடியும். அது சம்பவங்களை சரியான சமநிலையுடன் விளக்கியது.

டி. டபிள்யு., ஜெர்மனி

(g01 1/08)

சட்டத்தில் வெற்றி விவாகரத்து வழக்கில், என் பிள்ளைகளை நான் வளர்க்க உரிமைகோரி சமீபத்தில் நீதிமன்றம் சென்றேன். அங்கே என் முன்னாள் கணவர், என் மத நம்பிக்கையை பெரிய பிரச்சினையாக்கினார். அதை தாங்கிக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது” (ஏப்ரல் 22, 2000) என்ற கட்டுரையை வாசித்தபோது ஆறுதலாக இருந்தது; என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

டி. பி., ஐக்கிய மாகாணங்கள்

இந்த கட்டுரையை வாசித்த பிறகு, இங்குள்ள வக்கீல்களிடம் அதை காண்பித்தேன். ஒருவர்கூட அந்தப் பத்திரிகையை வேண்டாம் என்று சொல்லவில்லை. சிலர் என்னை தங்கள் அலுவலகத்திற்குள் அழைத்து காபி கொடுத்து அதைப்பற்றி கூடுதலாக என்னுடன் பேசினார்கள். தங்களோடு வேலை செய்யும் மற்ற வக்கீல்களுக்கு தர இன்னும் பத்திரிகைகளை கொண்டுவரும்படி அநேகர் கேட்டுக்கொண்டனர். ஐக்கிய மாகாணங்களின் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 45 வழக்குகளில் 36 வழக்குகளில் வெற்றி பெற்ற ஹேடன் கவிங்டனைப் பற்றி சொன்னபோது எல்லோரும் ஆச்சரியமடைந்தனர்.

கே. எம்., ஐக்கிய மாகாணங்கள்

(g01 1/08)

கண்ணி வெடிகள் “கண்ணி வெடிகளால் ஏற்படும் சேதம்” (மே 8, 2000) என்ற தொடர் கட்டுரையை வாசித்து நெகிழ்ந்துபோனேன். ஒவ்வொரு வருடமும் கண்ணி வெடிகளால் அநேக பொது மக்கள் உயிரிழக்கின்றனர் என்ற உண்மை என்னை திகைப்பில் ஆழ்த்தியது.

ஈ. யூ., பின்லாந்து

சக மனிதனை தாக்குவதற்காக இந்தக் கொடூரமான ஆயுதத்தை மனிதன் உபயோகிக்கிறான் என்பது வெட்கத்திற்குரிய விஷயம். இந்த சமயத்தில், கடவுள் தலையிட்டு பூமியிலுள்ள எல்லா அக்கிரமத்தையும் நீக்க அவருக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

ஜி. எஸ்., பிரேஸில்

இந்த தொடர் கட்டுரை ஒரு முக்கியமான திருப்புமுனை என சொல்லலாம். இது இன்றுள்ள மிக முக்கியமான ஒரு பிரச்சினையை பொது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அதிலுள்ள அட்டைப்படமும் பார்த்த உடனே ஆர்வத்தை தூண்டும் வண்ணம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஆர். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

(g01 1/22)

மனமுறிவைச் சமாளித்தல் நான் மன உளைச்சலால் அவதிபடுகிறேன். எனவே, பத்திரிகை வந்ததும் “பைபிளின் கருத்து​—⁠மனமுறிவைச் சமாளிப்பது எப்படி?” (மே 8, 2000) என்ற கட்டுரையை ஆவலுடன் படித்தேன். நீங்கள் சொன்ன விதமாக, செவிகொடுத்து கேட்டு பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் ஒரு நபரிடம் மனம்விட்டு பேசுவது மிகவும் ஆறுதலான ஒன்று. உங்களுடைய அருமையான கட்டுரைகளுக்கு என் நன்றிகள் பல.

ஏ. டி., லிதுவேனியா

(g01 1/22)

லாக்டோஸ் ஒவ்வாமை என் மனைவிக்கு அநேக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால், மருத்துவரை சென்று சந்தித்தாள். அப்போது மருத்துவர் அவளுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கும் என சொன்னார். அதைப் பற்றி நான் முன்பு கேள்விப்பட்டதே இல்லை. அதனால், “உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளுமா?” (மே 8, 2000) என்ற கட்டுரை மிகவும் பிரயோஜனமாக இருந்தது. இதைக் குறித்த சரியான தகவல்கள் சரியான நேரத்தில் கிடைத்தன. அதற்கு மிக்க நன்றி!

ஈ. பி., ஐக்கிய மாகாணங்கள்

(g01 1/22)

பறவையும் கைதிகளும் அநேக பறவைகளை வளர்த்து, பிறகு அவற்றை சுதந்திரமாக பறக்கவிடும் அனுபவம் எனக்குண்டு. அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி. “சிறைப் பறவையிடம் சிறைக் கைதிகள் கற்கும் பாடம்!” (மே 8, 2000) என்ற கட்டுரை எவ்வாறு யெகோவாவின் சிறிய படைப்புக்கூட நமக்கு அநேகத்தை சொல்லிக்கொடுக்கும் என்பதை உணர்த்தியது.

ஈ. டி., ஐக்கிய மாகாணங்கள்

(g01 1/22)