Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

அனகொண்டா அனகொண்டாக்கள் நடமாடும் பகுதியில் நான் வசித்து வருகிறேன். இந்த பாம்புகளைப் பற்றிய அநேக சம்பவங்களை மக்கள் கதைகதையாக சொல்வர். ஆனால் அவை உண்மையா இல்லையா என்பது உறுதியாக தெரியாததால் அவற்றை நம்புவது கஷ்டமாக இருந்தது. “அனகொண்டா​—⁠கக்கும் சில ரகசியங்கள்” (மே 22, 2000) என்ற உங்கள் கட்டுரை உண்மையையும் கட்டுக்கதையையும் தனித்தனியே பிரித்து நன்கு விளக்கியது. இந்த அற்புத படைப்பைப் பற்றி எனக்கிருந்த கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தது.

ஜே.எஸ்.பி., பிரேஸில்

(g01 2/08)

கிரேக்க அரங்கம் “எப்பிடாரஸ் அரங்கம்​—⁠காலத்தால் அழியாதது” (ஜூன் 8, 2000) என்ற கட்டுரையை வாசித்ததால் கிடைத்த சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்த கட்டுரையை பார்த்ததும், ஆர்வத்தை தூண்டும் அநேக குறிப்புகள் அதில் இருக்கும் என எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அதில் இந்தளவுக்கு ஆன்மீகம் சார்ந்த துணுக்கு செய்திகள் இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை!

கே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

(g01 2/08)

டைகள் “டைகள் அன்றும் இன்றும்” (ஜூன் 8, 2000) என்ற ஆர்வமூட்டும் கட்டுரைக்கு என் பாராட்டுகள். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். யெகோவாவை நேசிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன். என் மூத்த மகனுக்கு 13 வயது. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவனுக்குக் கொடுக்கப்படும் நியமிப்பில் பங்கேற்கும்போது டை கட்ட வேண்டியிருக்கும்; ஆனால் அவனுக்கோ எனக்கோ டை எப்படி கட்டுவது என்று தெரியாது. அவிசுவாசியான என் கணவர் இதுவரை டை கட்டியதே இல்லை. டையை எப்படி கட்ட வேண்டும் என்று எளிமையாக விளக்கிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி.

எம். பி., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு இப்போது 11 வயது. உங்களுக்கு ஒருவேளை ஆச்சரியமாக இருக்கலாம், டையை எப்படி கட்ட வேண்டும் என்பதை கட்டுரையிலிருந்த படங்களிலிருந்துதான் கற்றுக்கொண்டேன். இப்போது என் அலமாரியிலுள்ள எல்லா டைகளையும் நான் உபயோகிக்கிறேன்.

ஏ. பி., இத்தாலி

(g01 2/22)

பரிணாமம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், “பரிணாமம் தர்க்கரீதியானதா?” (ஜூன் 8, 2000) என்ற கட்டுரையில் வெளிவந்த பரிணாமம் சம்பந்தப்பட்ட சில குறிப்புகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “மனிதனால் இதுவரை புரிந்துகொள்ள முடியாத மிகவும் சிக்கலான டெக்னிக்கை சிலந்தி தானாகவே பரிணாம முறையில் உருவாக்கியுள்ளது என்ற கருத்தை நம்ப முடியுமா?” என கேட்டிருந்தீர்கள். ஏன் முடியாது? விஞ்ஞானிகள் எல்லாம் தெரிந்தவர்கள்தானே!

சி. டபிள்யு., ஆஸ்திரேலியா

வலையை சிலந்தி உருவாக்குவதில், அநேக வியக்கத்தக்க சிக்கலான செயல்பாட்டு முறைகள் உட்பட்டுள்ளன. அநேக பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் எவ்வளவோ ஆராய்ச்சிகளை செய்தும், அவர்களால் அதைப் பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் இதெல்லாம் பரிணாமத்தாலேயே வந்தது என தங்கள் கொள்கையில் பிடிவாதமாக இருக்கின்றனர். இதுவும் இதுபோன்ற மற்ற அநேக உதாரணங்களும் பரிணாமக் கொள்கையிலுள்ள தர்க்கரீதியற்ற அடிப்படை குறிப்புகளை வெளிப்படுத்துகின்றன. அத்துடன் இந்த கோட்பாடு, விஞ்ஞானத்தை அல்ல ஆனால், ஆதாரமற்ற நம்பிக்கையையே சார்ந்திருப்பதை தெளிவாக்குகிறது என நம்புகிறோம்.​—⁠ED.

நம் முன்னோர் (எப்படி இருந்திருந்தாலும்) எவ்வாறு பிரிந்து, ஆண் என்றும் பெண் என்றும் ஆனார்கள்? என்ற கேள்வி என்னை வெகு காலமாக துளைத்தெடுத்திருக்கிறது. இது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என சொல்வது மட்டுமே சரியல்ல. ஏனென்றால், ஒரு பெண் படிப்படியாக கருவுற்றிருக்க முடியாது. இது பரிணாம கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணாக இருக்கிறது. இதைப் பற்றி நான் இதுவரை எந்த கட்டுரையையும் வாசித்ததே இல்லை.

ஹெச். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

நமது வாசகர் ஒரு அருமையான குறிப்பை சொன்னார். இதே போன்ற குறிப்பை மே 8, 1997 இதழில் வெளிவந்த “பரிணாமத்திற்கு ஆதாரம் உண்டா?” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். “புதிய இனம் பெருகுவதற்காக ஆணும் பெண்ணும் தற்செயலாக ஒரேசமயத்தில் பரிணாமத்தால் உண்டாயின எனவும் நாம் நம்ப வேண்டுமாம். அதுமட்டுமா, ஆணும் பெண்ணும் ஒரே சமயத்தில் மாத்திரமல்ல ஒரே இடத்திலும் உருவாயின என்பதையும் நாம் நம்ப வேண்டும்! இச்சந்திப்பு இல்லையேல், இனப்பெருக்கம் இல்லை!” என குறிப்பிட்டிருந்தோம்.​—⁠ED.

(g01 2/22)