Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சவால்களை சமாளிக்க மக்களுக்கு உதவுதல்

சவால்களை சமாளிக்க மக்களுக்கு உதவுதல்

சவால்களை சமாளிக்க மக்களுக்கு உதவுதல்

இளைஞர் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பின் கிழக்கு மாகாண செயலர் யெகோவாவின் சாட்சிகளுடைய இலங்கை கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். விழித்தெழு! பத்திரிகையின் பழைய பிரதிகள் சிலவற்றைக் கேட்டு எழுதியிருந்தார். இதோ! அவர் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்:

“நீங்கள் அனுப்பிய பத்திரிகைகள் கல்வி புகட்டுவதாகவும், தகவல் செறிந்ததாகவும், உத்வேகமளிப்பதாகவும் இருந்தன; அவை தர்க்க ரீதியாகவும் யதார்த்தமாகவும் இருப்பதை நானும் என் சக ஊழியர்களும் கண்டோம். சிலர் தவறாக நினைப்பதுபோல், அந்தப் பத்திரிகைகள் கிறிஸ்தவ மதக் கொள்கையை பரப்பும் உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை அது தலைசிறந்த பத்திரிகை.

“விழித்தெழு! இதழ்களுக்கு (பழைய பிரதிகளுக்கும் சரி புதிய பிரதிகளுக்கும் சரி) நல்ல வரவேற்பு இருக்கிறது. இனிவரும் மாதங்களிலும் இந்தப் பத்திரிகைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. முதியவர்கள், இளைஞர்கள், பிள்ளைகள் என பல தரப்பினருக்கும் அறிவையூட்டும் கட்டுரைகள் உங்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. மதசார்பற்ற நிலைமையால் உருவாகி இருக்கும் அல்லது இனி உருவாகும் சவால்களை சமாளிக்க எல்லாருக்கும் அவை உதவும்.”

சரித்திரம் காணா சவால்களை இன்று எல்லா வயதினரும் எதிர்ப்படுகின்றனர். முக்கியமாய், எதிர்காலம் எப்படி இருக்கும், அக்கறையுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறாரா என இன்று பலர் ஆழ்ந்து யோசிக்கின்றனர். கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டில் இத்தகைய கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி ஒரு பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

(g01 2/22)

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.