Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உள்ளபடி சொன்னதைக் கண்டு உள்ளம் குளிர்ந்தார்

உள்ளபடி சொன்னதைக் கண்டு உள்ளம் குளிர்ந்தார்

உள்ளபடி சொன்னதைக் கண்டு உள்ளம் குளிர்ந்தார்

ஸ்பெய்னிலுள்ள பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் விழித்தெழு! பத்திரிகைக்கு பாராட்டு தெரிவித்து உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் இவ்வாறு சொன்னார்:

“உங்களுடைய விழித்தெழு! இதழின் இரண்டு பிரதிகள் சமீபத்தில் எனக்கு கிடைத்தன. பல்வேறு விஷயங்களில் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகள் அதில் இருந்தன. நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல, ஆனால் இந்தப் பிரசுரம் உள்ளதை உள்ளபடியே எடுத்துரைப்பதை அறிந்து மெச்சினேன். அதன் தோற்றமும் படங்களும் பிரமாதம். பாரபட்சமின்றி அறிவியல் கண்ணோட்டத்தில் விஷயங்களை அலசுகிறது. உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.”

விழித்தெழு! பத்திரிகையிலுள்ள கட்டுரைகளில் பல்வகை அறிவியல் அத்தாட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. விஷயங்களை வாசகர்கள் நன்கு அறிந்து முடிவெடுப்பதற்கு இவை உதவுகின்றன. வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற 32-பக்க சிற்றேட்டிலும் இந்த அணுகுமுறையே பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, “உயிர் தானாகவே வந்துவிட்டதா?” “வடிவமைப்பு வடிவமைப்பாளரைத் தேவைப்படுத்துகிறது” என்ற உபதலைப்புகளிலுள்ள விஷயங்கள் சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள அத்தாட்சி, வானவியல், நுண்ணுயிரியல், இயற்பியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளால் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரசுரத்தைப் பற்றி இன்னும் அதிக தகவல் பெற இங்குள்ள கூப்பனை பூர்த்தி செய்து, அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இப்பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்தில் உள்ள விலாசத்திற்கோ அனுப்புங்கள்.(g01 3/8)

வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

நட்சத்திர மண்டலம்: Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin